கர்நாடக மாநிலத்தில் விநாயகருக்கு கோயில் கட்டிய முஸ்லிம் சமுதயதைத்தை சேர்ந்தவர். பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சாம்ராஜ்நகர் கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய தடை கோயில்களில் முஸ்லிம்கள் பழங்கள் மட்டும் ஊதுவத்திகள் விற்பதற்கு தடை. இதனால் அங்கே மதநல்லிணக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது. இதை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக இந்த செயலை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் கடலோர கர்நாடகா மாவட்டத்தில் கோயில்களில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு ஹலால் இறைச்சி களையும் வாங்கக் கூடாது என இந்து அமைப்பினர் பிரச்சாரத்தையும் முன்னெடுத்தனர்.
மேலும் பழங்கள் பட்டுக்குடைகளை இந்து வியாபாரிகளிடம் மட்டுமே வாங்க வேண்டும் முஸ்லிம் வியாபாரிகளிடம் வாங்கக்கூடாது என்று கூறி வருகின்றனர். மேலும் முஸ்லிம்களை தொழுகைக்கு அழைக்கும் மணியும் இனிமேல் அடிக்கக் கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்த நேரத்தில் சாம்ராஜ் மாவட்டத்தில் வசிப்பவர் பி ரகுமான் இவர் நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றவர். மேலும் இவர் தற்போது தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகருக்கு ஒரு கோயிலைக் கட்டினார்.

தற்போது அந்த கோயிலுக்கு அர்ச்சகரை நியமனம் செய்து மாத சம்பளமாக 4,000 ரூபாய் கொடுத்து வருகிறார். முஸ்லிமாகிய நீங்கள் இந்து கோவிலை கட்டுவதற்கு காரணம் என்ன என்று அவரிடம் கேட்டபோது “எனக்கு அல்லா எப்படியோ அதே போல் தான் இந்துக்களுக்கு சிவன் அனைவரின் உடலிலும் ஓடுவது சிவப்பு நிறத்திலான ரத்தம் தான் என்ன வேறுபாடு உள்ளது” என்றார். இவரது செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி மத நல்லிணக்கத்தில் உறுதி ஆக இருக்கிறார் என்று கூறி வருகின்றனர் பலர்.
