“மைனராக இருக்கும் முஸ்லீம் பெண் தனக்கான ஆண் துணையை அவர்களே தேர்ந்தெடுக்கலாம், கணவன் மேல் POCSO சட்டம் செல்லாது” – டெல்லி கோர்ட்

18 வயதுக்குட்பட்ட பூப்படைந்த மைனர் முஸ்லிம் பெண் தனது பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ளது.

முஸ்லிம் மதத்தினருக்கு உள்ள தனிநபர் சட்டத்தின்படி 18 வயது உட்பட்ட மைனர் பெண் தனது பெற்றோர் அனுமதி இன்றி திருமணத்தை செய்து கொள்ளலாம் என செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறது. அந்த பெண் 18 வயதுக்கு குறைவாக இருந்தாலும் சரி கணவருடன் இணைந்து வாழ்வதற்கான தகுதியும் உரிமையும் அவருக்கு உண்டு என தெரிவித்துள்ளது நீதிமன்றம்.

தங்களை பிரிக்க நினைக்கிறார்கள் உதவி செய்யுங்கள் எனக்கோரி அந்த தம்பதியினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாஸ்மீத் சிங் இந்த வழக்கை விசாரித்து சட்டத்தின்படி தம்பதியருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் இந்திய தண்டனைச் சட்டம் 363 கடத்தல் பிரிவின் கீழும், பின்னர் pocso சட்டத்தின் கீழ்ம் கணவர் மீது பெற்றோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வளர்த்த நாயுடனும், பசுவுடனும் உடலுறவு செய்த நபர் | விசாரித்ததில் வெளியான திடுக்கிடும் உண்மை

ஆனால் சிறுமி தனது பெற்றோரால் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், அதனால் தான் என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் இவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அரசு மூலம் தாக்கல் செய்த அந்த வழக்கின் நிலை அறிக்கையில் அந்த சிறுமியின் பிறந்த தேதி ஆகஸ்ட் 2 2006 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவர் திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு 15 வயது தான். இந்தியாவில் முஸ்லிம்களுக்கென ஒரு தனி சட்டம் உள்ளது அந்த சட்டம் 1937 இல் தொடங்கப்பட்டது.

திருமணம், வாரிசு, வாரிசுரிமை, சொத்துரிமை மற்றும் தொண்டு ஆகிய விவகாரங்களில் முஸ்லிம்கள் மட்டும் பிரத்யேகமாக இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள்.

முஸ்லிம் பெண்கள் விவாகரத்து மற்றும் கணவரால் நிராகரிக்கப்பட்டு விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பெறுவதற்கான சூழ்நிலைகள் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் முஸ்லிம் திருமண கலைத்தல் சட்டம் ஆகியவை 1939 கீழ் வருகிறது. மேலும் இந்த சட்டங்கள் கோவா மாநிலத்தில் மட்டும் பொருந்தாது, அங்கு அவர்களுக்கு என்று ஒரு தனி சிவில் சட்டம் இருக்கின்றது. மதத்தை பிற்படுத்தாமல் அனைத்து நபர்களுக்கும் ஒரே சட்டம் என்ற முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திருமண சட்டம் 1954 இன் கீழ் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம்களுக்கு இது பொருந்தாது.

தற்போது பூப்படைந்த அந்த 15 வயது சிறுமியின் கோரிக்கைக்கு ஏற்ப கணவருடன் 18 வயது ஆகாமலிருந்தாலும் நீங்கள் வாழலாம். இதற்க்கு பெற்றோர்கள் சிறுமியின் கணவன் மேல் POCSO சட்டத்தை போடமுடியாது என முஸ்லீம் சட்டத்தை மேற்கோள்காட்டி கோர்ட்டு இந்த பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

Spread the love

Related Posts

“மீண்டும் காமெடியனாக நடிக்க தயார்” – நடிகர் சந்தானம்

தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு நண்பனாகவும் காமெடி குண சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை மலை போல்

“மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதில் தவறு ஏதும் இல்லை” விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்

இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதில் தவறு ஏதும் இல்லை என்று எஸ் ஏ சந்திரசேகர்

நடிகர் அர்ஜுன் வீட்டில் நடந்த அதிர்ச்சி மரணம் | குவிந்த திரைபிரபலங்கள்

பிரபல நடிகர் அர்ஜுன் அவர்களின் தாயார் காலமானார். அவருக்காக திரைதுறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்