லால் சிங் சத்தா படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தாவின் முன்னாள் கணவரும் மற்றும் பிரபல நடிகருமான நாகசைதன்யா கல்யாணத்தை குறித்து தனது கையில் குத்தி இருந்த டாட்டூ பற்றி விளக்கம் அளித்தார்.
தெலுங்கு திரை உலகை ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நாக சைத்தன்யா. இவர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவருடைய ஹிந்தி முதல் படம் இதுதான். இந்த படத்தில் அமீர் கானுக்கு நண்பனாகவும் ஒரு ராணுவ வீரராகவும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற ஃபாரஸ்ட் கம்ப் படத்துடைய அதிகாரபூர்வ தழுவல் தான்.

தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக வெளியாக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இந்த படத்திற்கு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நாகசைதன்யாவிடம் இது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் அது என்னுடைய திருமண தேதியை குறிக்கும் ஒரு டாட்டூ தான். அதை ரசிகர்கள் தெரியாமல் வேறு ஏதோ என்று நினைத்துக் கொண்டு அதனை காப்பி அடித்து வருகின்றனர்.
தயவுசெய்து அதனை செய்யாதீர்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். மீண்டும் அந்த டாட்டூவை ஏன் அழைக்காமல் வைத்திருக்கிறீர்கள் என கேட்டதற்கு அதை அழிக்க எனக்கு இதுவரை தோன்றவில்லை அதனால் அது அப்படியே இருப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் நான் அதை அப்படியே வைத்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
