இந்திய மக்களின் மத நல்லிணக்கம் கடைபிடிக்கப்படுவது தொடர்பாக திருமாவளவன் உணர வேண்டும் என நாராயணன் திருப்பதி தற்போது கூறியுள்ளார்.
அவர் இது குறித்து பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பேசுகையில் :- “கிறிஸ்தவ உணர்வை தூண்டுவதற்கு இயேசு பெயரை சொன்னால் போதும், இஸ்லாமிய உணர்வை தூண்டுவதற்கு அல்லாஹ் பெயரை சொன்னால் போதும், கிறிஸ்தவம் பற்றி சொல்வதற்கு பைபிள் வாசகங்களை சொன்னால் போதும். இஸ்லாம் பற்றி சொல்வதற்கு குர்ஆன் வாசகங்களை சொன்னால் போதும். ஆனால் இந்துக்களை ஒன்றாக திரட்டுவதற்கு ஜாதி வெறியை தூண்டினால் தான் திரட்ட முடியும் அவனுக்கு எந்த வாசகமும் இல்லை இந்து மதத்திற்கு நிறுவனரும் இல்லை தனித்தனி கடவுளை சொல்லி இந்துக்களை திரட்ட முடியாது.

இயேசுவை ஒரே கடவுள் அல்லாஹ் ஒரே கடவுள் அவர் அருவமானவர் அவர் ஏக இறைவன் எங்கும் இருப்பார் என்றும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சொல்வது போல் இந்துக்கள் யாரை சொல்வார்கள் சிவன் என்று சொன்னால் விஷ்ணு வரமாட்டான், விஷ்ணுவை சொன்னால் முருகன் வரமாட்டான், முருகனை சொன்னால் விநாயகம் வர மாட்டான், விநாயகரை சொன்னால் கருப்புசாமி வரமாட்டான், கருப்பசாமியை சொன்னால் நொண்டி கருப்பசாமி வரமாட்டான் என்று திருமாவளவன் அவர்கள் பேசிய ஒரு உரையை கேட்க நேர்ந்தது.
மற்ற மதங்களில் கடவுள்களை ஏற்றுக் கொள்வதில்லை மற்ற மாதங்களில் அவைகளை சாத்தான்கள் என்று குறிப்பிடுகின்றன. மற்ற நம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள் என்று கூறுகின்றனர். இன்று மதங்களை குறித்து மற்ற கடவுள்கள் குறித்து எந்த விமர்சனமும் செய்வதில்லை. இந்து மதத்திற்கு நிறுவனர் இல்லை என்று அவர் சொல்வது சரிதான். இந்து மதத்திற்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை. ஆதியும் அந்தமும் இல்லாதது இந்து மதம்.
சனாதான தர்மம் என்ற கோட்பாட்டை வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்து மதம் என திருமாவளவன் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து மேலும் பேசிய அவர் கிறிஸ்தவ மதத்திலும் இஸ்லாம் மதத்திலும் பிரிவினை இல்லையா தீண்டாமை இல்லையா என்பதை திருமாவளவன் அறியவேண்டும். இனியும் இந்துக்களை குறை கூறாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரலை கொடுக்க முயற்சி செய்யுங்கள். சாதிய கொடுமைகளை அகற்றிய பாஜக வின் தாய் இயக்கமான rss குறித்து அம்பேத்கர் கூறிய கருத்தை திருமாவளவன் அவர்கள் படித்து தெளிவு பெற வேண்டும் என நாராயண் திருப்பதி கூறியுள்ளார்.
