சாதிய அடிப்படையிலான அரசியலுக்கு அப்பால் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பணி செய்யும்படி கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கூட்டணி கட்சி எம்பிக்களை வரவழைத்து பிரதமர் மோடி டெல்லியில் சந்தித்து பேசி வருகிறார். பீகாரை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் உடன் கலந்துரையாடிய பிரதமர் தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கும் படியும் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும் படியும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் படியும் எம்பி களிடம் வலியுறுத்தி உள்ளார் பிரதமர் மோடி
