இப்ப நம்ம பாக்க போற படம் என்னன்னா துஷாரா விஜயன், காளிதாஸ், கலையரசன் போன்றவர்கள் நடித்து இன்னைக்கு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலா திரையரங்குல வெளியாகி இருக்கிற நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தை இயக்கியிருப்பவர் ரஞ்சித் படத்துடைய கதை என்னன்னா இந்த சமூகத்தில் காதல்னா என்ன காதலால ஜாதி மதம் மட்டும் அழியாது, பாலினமும் சேர்த்து அழியும் அப்படிங்கற ஒரு கான்செப்ட் வச்சு தான் இந்த படத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.
இந்த படத்தை ரஞ்சித் அணுகிய விதம் வந்து ரொம்பவே பார்க்க அழகா இருந்துச்சு, அவர் இதுக்கு முன்னாடி எடுத்த படங்களை விட இது ரொம்பவே மாறுபட்ட ஒரு படம், அது மேக்கிங் ஆவும் சரி கதையாகவும் சரி ஒரு நல்ல ஒன் லைன் அதுக்கு ஏற்ற ஒரு நல்ல திரைக்கதை. படத்திற்கு இன்னொரு பலம் வசனங்கள் தான் பல இடங்களில் வசனம் மூலமா நிறைய அப்பட்டமான உண்மைகளை அப்படியே தோலுரிச்சி காமிச்சி இருக்காங்க. அது ஆணவ கொலைகள் ஆகட்டும், ஒரேஇணைசேர்க்கையாளர்கள் லவ் பண்ணா அதை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பது ஆகட்டும் இந்த மாதிரி ஒரு சில விஷயங்களை ஊசியில நூல நுழைக்கிற மாதிரி சொல்லாம சொல்லி இருக்காரு இயக்குனர்.
போதையில் நடிகை திரிஷா சோபாவில் நண்பர்களுடன் கட்டி புரளும் வீடியோ காட்சிகள் வைரல்

அடுத்து படத்துல நடிச்ச எல்லாருடைய நடிப்பு அருமை. படத்தில் ஒரு பத்துல இருந்து 15 கேரக்டர் வராங்க எல்லா கேரக்டரும் நம்ம படம் பார்த்துட்டு தியேட்டர்ல இருந்து எழுந்து வரும்போது கூட மனசுல நிக்கும். அந்த மாதிரி எந்த ஒரு கேரக்டருமே வேல இல்லாம படத்துல இருக்காது. எல்லா கேரக்டருக்கும் ஏதோ ஒரு இம்பார்ட்டன்ஸ் படத்துல இருந்துட்டே இருக்கும். முக்கியமா சொல்லணும்னா கலையரசன் அதுக்கப்புறம் துஷாரா விஜயன் இவங்க ரெண்டு பேருடைய பர்ஃபார்மன்ஸ் மட்டும் மத்த ஆட்கள் உடைய பெர்ஃபார்மன்ஸ் விட்டு தனித்து நிற்கும் அதற்கு காரணம் இந்த ரெண்டு கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் தான்.
அடுத்ததா படத்தோட மியூசிக், ஜெனரலா இது வந்து ஒரு மியூசிக்கல் ரொமான்டிக் மூவி தான். மியூசிக்கல் மூவினாலே நமக்கு தெரியும் படத்தில் அங்கங்க பாட்டுகள் வரும், ஆனா அந்த ஒரு பாட்டு நமக்கு எந்த விதத்திலும் “ஏண்டா இந்த பாட்டு இங்க வந்துச்சு இப்போ தேவை இல்லாம” அப்படிங்கிற எண்ணத்தை கொடுக்க கூடாது. அதே மாதிரி தான் இந்த படத்திலும் பாட்டு கூடவே தான் கதை நகரும், அந்த பாட்டு மூலமாகவும் நல்ல கருத்த இயக்குனர் சொல்லி இருப்பார். அதனால பாட்டு வர இடங்கள் அதிகமா போர் அடிக்கல ஒரு மியூசிக்கல் ரொமான்டிக் மூவி எப்படி இருக்குமோ அப்படி தான் இந்த படம் இருந்துச்சு.

படத்துடைய முதல் பாதி இரண்டாம் பாதி இரண்டுக்குமே திரைக்கதை நல்லா சுவாரசியமாக அமைச்சிருக்காங்க. சில பேருக்கு வந்து திரைக்கதை தொய்வு தெரியலாம். ஒரு சிலருக்கு படத்துல என்னடா சொல்ல வரீங்க அப்படிங்கற மாதிரியும் ஃபீல் வரலாம். ஏன்னா இந்த படத்துல சில முற்போக்கான கருத்துக்கள் நிறைய சொல்றாங்க, ஆனா நம்ம ஊர் மக்களுக்கு அதை புரிஞ்சிக்கிற அளவுக்கு பக்குவம் இருக்காது.
இது ஒரு நல்ல காதல் திரைப்படம் அவ்ளோ தான், மத்தபடி இதுல நான் பெருசா ரிவில் பண்ண எதுவுமே கிடையாது. இந்த மாதிரி படத்தை எல்லாம் அனுபவிக்க வேண்டிய படம். அதனால முடிஞ்ச வரைக்கும் தியேட்டர்ல இந்த படத்தை அனுப்புவீங்க.
Kingwoods Rating :- 3.75/5