திருப்பதி கோயிலில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி செருப்பு அணிந்து வந்தார்கள் என்று தேவஸ்தானத்தில் இருந்து புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஒரு மன்னிப்பு கடிதத்தை விக்னேஷ் சிவன் தற்போது அவர் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியது என்னவென்றால் : – “தங்களது திருமணம் திருப்பதியில் நடக்க வேண்டும் என்று விரும்பினோம் ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதை உங்களால் நிறைவேற்ற முடியாமல் போனது. திருமணம் முடிந்த கையோடு வீட்டுக்கு கூட செல்லாமல் திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு வந்தோம். இந்த நாளில் வாழ்க்கை முழுக்க நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் கோவிலுக்கு வெளியே போட்டோ ஷூட் நடத்தினோம். இதனால் திருப்பதியில் திருமணம் நடந்தது போல நாங்கள் உணர்ந்தோம்.

ஆனால் மக்கள் கூட்டம் நாங்கள் எதிர்பார்க்காத வகையில் வந்து சேர்ந்ததும். அதன் காரணமாக கோவில் வளாகத்தை விட்டு வெளியேறியபோதும், போட்டோ எடுக்கும் போதும் செருப்பு அணிந்து வந்ததை நாங்கள் உணரவில்லை. நாங்கள் இருவரும் கடவுள் மீது அதீத பக்தி கொண்டவர்கள். தொடர்ந்து கோவில்களுக்கு செல்லும் தம்பதிகள். கடந்த முப்பது நாட்களில் கிட்டத்தட்ட ஐந்து முறை திருப்பதிக்கு சென்று திருமணத்தை நடத்த முயற்சித்தோம். மேலும் தாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு எங்களால் எந்த தீங்கும் ஏற்படவில்லை. இதனால் உங்கள் மனம் புண் படுத்தியிருந்தால் நாங்கள் அதற்காக மன்னிப்பு கேட்டு வருந்துகிறோம்.” இப்படியாக விக்னேஸ் கூறியுள்ளார். இந்த கடிதத்தின் மூலம் தற்போது ஏற்பட்ட சர்ச்சை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

