நயன்தாரா விக்னேஷ் சிவனும் தங்களது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக டிஜிட்டல் பத்திரிகையை வெளியிட்டனர் | எங்கே எப்போது நடக்கிறது ?

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி திருமணத்திற்காக தயாராகி வரும் நிலையில் அவர்களின் டிஜிட்டல் திருமண அழைப்பிதழை ஒரு ஆங்கில இணையதளம் முதல் முறையாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளாக கோலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் இவர்கள் இருவருக்கும் நானும் ரவுடிதான் படம் மூலம் காதல் ஏற்பட்டு பின்னாளில் அது வளர்ந்தது அதற்கு பிறகு ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து வந்தனர். அதன்பின் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் எடுத்துவிட்டு அதற்குப் பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.

அப்போது இவர்கள் இணைந்து எடுத்த படம்தான் காத்துவாக்குல 2 காதல் இந்த படத்தை நாம் ரிலீஸ் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என சத்திய பிரமாணம் செய்தனர். அதன்படி இந்த படம் ரிலீஸ் ஆன ஒரு மாதம் கழித்து தற்போது கல்யாண செய்தியை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் “Wn, Save The Date FOR THE wedding of Nayan & Wikkk. 9th June 2022. Mahabs.” என்று அந்தப் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இதில் நயன்தாராவின் பெயரிலிருந்து விக்னேஷ் சிவன் பெயர் தோன்றுமாறு எழுதப்பட்டுள்ளது. பல ரசிகர்கள் இவர்களின் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Spread the love

Related Posts

வசமாக சிக்கிய அண்ணாச்சி | சரவணா ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 235 கோடி முடக்கம் | அமலாக்க துறை அதிரடி அறிவிப்பு

தமிழகமெங்கும் பல்வேறு மாவட்டங்களில் சரவணா கோல்ட் பேலஸ் ஸ்டோர்ஸ் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு வரக்கூடிய நிலையில்

நாளை ஒரே நாளில் வெளியாகப்போகும் தல-தளபதி படத்தின் Update | சோசியல் மீடியா என்ன ஆகப்போகுதோ | கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் வலிமை. இந்த படத்தை

முதல்வருக்கு கிறித்துவ மதம் தொடர்பான புத்தகத்தை பரிசளித்து பாஜகவினரிடம் வெறுப்பை பெற்ற கலெக்டர்

புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கிறிஸ்தவம் தொடர்பான புத்தகத்தை பரிசாக அளித்ததால்