கோலிவுட் வட்டாரத்தில் புதுமண தம்பதிகளாக வலம் வரும் ஜோடிகள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இந்த ஜோடிக்கு கடந்த வாரம் திருமணம் மாமல்லபுரத்தில் ஆடம்பரமாக நடந்தது. இந்த கல்யாணத்திற்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தங்களது வருகை தந்தனர். இவர்கள் திருமணம் முடித்த கையோடு திருப்பதிக்கு சென்றனர். அங்கு செருப்பு அணிந்து கோயிலுக்குள் வந்ததால் அது ஒருபுறம் பிரச்சனையை உருவாக்கியது.
அதன் பிறகு இவர்கள் கல்யாணம் நடந்த ரிசார்ட்டுக்கு பின்புறம் கடற்கரை அமைந்துள்ளதால் அந்த கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காமல் இருந்த விவகாரத்திலும் சர்ச்சையில் சிக்கியது இந்த தம்பதி. தற்போது கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு விருந்துக்காக சென்றுள்ளனர். அங்கு இரண்டு வாரம் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஜோடி இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாகவும் அதன் பிறகு அட்லீ இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாதாகவும் கூறப்படுகிறது. ஷாருக்கான் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் என்று தொடங்குகிறது. இதன் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா அடுத்த வாரம் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் கலந்து கொள்வதற்காக கல்யாணம் முடிந்த கையோடு உடனே ஷூட்டிங் திரும்புகிறார் நயன்தாரா. கல்யாணம் முடித்த கையோட ஷூட்டிங்கிற்கு நயன்தாரா செல்லவுள்ளதால் மணவருத்தத்தில் இருக்கிறாராம் விக்னேஷ். இன்னும் ஒரு சில மாதங்களில் அவரும் அடுத்த அஜித் படத்திற்கான ஸ்கிரிப்ட் ஒர்க்கில் இறங்கப் போகிறார் அந்த படத்திலும் அஜித்க்கு ஜோடி நயன்தாரா தான் என கூறப்படுகிறது. இவர்களின் கல்யாணத்துக்குப் பிறகும் ஹனிமூன் செல்ல கூட நேரம் இல்லாமல் இருவரும் உழைத்து வருகின்றனர் என இந்த தம்பதியை பாராட்டி வருகின்றனர்.
