ஆசை கணவனுக்காக ஆச்சர்ய பரிசு அளிக்கப்போகும் நயன்தாரா | இவ்ளோ பெரிய வீடா ? அதுவும் ரஜினி இல்லத்தின் அருகில்

ரஜினிகாந்தின் இல்லத்திற்கு அருகே நடிகை நயன்தாராவின் பிரம்மாண்டமான வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

நடிகை நயன்தாரா தென்னிந்திய நடிகைகளிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக வளர்ந்துள்ளார். இவரின் வயது 40 நெருங்கப் போகிறது. ஆனாலும் இன்றளவும் இவர் சினிமாவில் சாதித்து வருகிறார். அப்போதெல்லாம் நடிகைகளின் ஆயுள் காலம் 25 முதல் 30 வயது வரை என கணக்கிடப்பட்டு முப்பது வயதுக்கு மேல் இருக்கும் நடிகைகள் எல்லாம் ஓரம் கட்டி விடுவார்கள். ஆனால் அதை எல்லாம் முறியடித்து 35 வயதிற்கு மேல் ஆனாலும் என்னால் நடிக்க முடியும் என நடித்து சாதித்து காட்டியவர் தான் நயன்தாரா. இப்போது வரை இவருக்கு தனி மார்க்கெட் இருக்கிறது.

மேலும் இவர் இந்தியிலும் கன்னடத்திலும் மலையாளத்திலும் கூட படம் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணத்திற்கு முன்பே ஆறு வருடமாக காதல் வாழ்க்கையில் இருந்து அதன் பின் தற்போது திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடித்த கையோடு தாய்லாந்துக்கு தேன் நிலவு சென்று தற்போது ஊர் திரும்பி உள்ளனர். ஜவான் படத்தில் நடிக்க மும்பைக்கு கிளம்பி இருக்கிறார். இந்த படம் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வருகிறது.

எனவே இவர் திருமணம் ஆகி சில நாட்களே ஆகியுள்ள நிலையில் தனது ஆசை கணவன் விக்னேஷ் சிவனுக்காக ஒரு பிரம்மாண்ட வீடு ஒன்றை திருமண பரிசாக வழங்கவுள்ளார். அந்த வீடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லம் அமைந்துள்ள போயஸ் காரன் பகுதியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. 16,500 சதுர அடியில் இந்த வீட்டை கட்டி வருகிறார் நயன்தாரா. மேலும் இந்த வீட்டின் உள்புற வேலைப்பாடுகள் குறித்து பல தகவல்கள் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அதன்படி இந்த ஆடம்பர வீட்டில் நீச்சல் குளமும், தியேட்டரும், உடற்பயிற்சி கூடமும் அமைத்து கட்டப்படவுள்ளது. குறிப்பாக பாத்ரூம் மட்டும் 1500 சதுர அடியில் கட்டப்படுகிறதாம். பாத்ரூம் மட்டுமே இவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் போது வீடு எப்படி இருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

Spread the love

Related Posts

IPL Auction 2022 | எந்தெந்த தமிழக வீரர்கள் எந்தெந்த அணியில் உள்ளனர் | ஒரு அலசல்

ஐபிஎல் 2022 காண ஏலம் வெற்றிகரமாக நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் பல ஊரை சேர்ந்த

மனைவிக்கு ஆண்குறி இருக்கிறது, இது பெண்ணே இல்லை என நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்த கணவன்

மனைவிக்கு ஆண்குறி உள்ளது இது பெண்ணே கிடையாது என்று கணவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சம்பவம்

வேலூர் :- வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்ததால் கணவன் ஆணுறுப்பு மேல் கொதிக்க கொதிக்க சுடு தண்ணீரை ஊற்றிய மனைவி

வேலை பார்க்கும் இடத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகமடைந்து கணவனின் ஆணுறுப்பு மேல்