போனை திறந்தாலே ஒருநாளும் இந்த ஜோடியை பற்றின செய்தியைப் அறியாமல் நாம் இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு ஜோடி தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் பொது இடங்களில் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும். ரசிகர்கள் மத்தியிலும் இவர்கள் மிகவும் கொண்டாடப்படும் ஒரு ஜோடியாக வலம் வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்று விட்டு வரும் போது எடுத்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
ஏனென்றால் அதில் நயன்தாரா நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இருவரும் ரகசிய திருமணம் நடந்து விட்டதா ?? அதனால் தான் நயன்தாரா இப்படி செய்திருக்கிறார ?? என்று எல்லாம் கேள்விகள் எழ தொடங்கியது. ஆனாலும் இதைப் பற்றிய முழு விவரம் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் ஒரு தகவல் என்னவென்றால் நயன்தாரா திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடிக்க உள்ளதாகவும் அதனால் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.
இவருக்கு ஏற்கனவே 37 வயது ஆகிவிட்டது, இனிமேல் கருவுற்று குழந்தை பெற்றுக்கொள்வது என்பது ஒரு கடினமான செயல் ஆகும் அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள முற்பட்டால் ஒரு வருடம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கவேண்டும். ஆனால் நயன்தாராவோ கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கிறார். எனவே அடுத்த 5 வருடங்களுக்கு இது முடியாத ஒரு காரியம். அதனால்தான் இந்த வாடகை தாய் முறையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறாராம் நயன்தாரா. ஏற்கனவே பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ராவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.