தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் couples ஆக இருப்பவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்கள் இருவருக்கும் ஒரு சில நாட்களுக்கு முன் மாமல்லபுரத்தில் இருக்கும் ஒரு பெரிய ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்தில் ஒரு சில சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அதாவது அட்லி ஷாருக்கான் ரஜினி விஜய் சேதுபதி போன்றவர்கள் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தனர். மேலும் இந்த திருமணத்திற்கு எந்த மீடியாவும் உள்ளே வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர். அதையும் மீறி யாரும் செல்போன் எடுத்து வரக்கூடாது என்றும் qr code ஸ்கேன் செய்தால் தான் உள்ளே விடுவோம் என்றும் பல கட்டுப்பாடுகளை விதித்தனர்.

இந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நடிகர் உதய பானு ஒரு பேட்டி ஒன்றில் நயன்தாராவும் விக்னேஷ்வரும் இணைய காரணமே நான் தான் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டி தற்போது வைராலாகி வருகிறது அவர் கூறியது என்னவென்றால் :- “நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது விக்னேஷ் அவனை அழைத்து உன்னுடைய ஆக்டிவிட்டி எல்லாம் பார்க்கும்போது எனக்கு பிரபுதேவாவை பார்க்கிற மாதிரியே இருக்கு என்று சொன்னேன், அதேபோல நயன்தாராவிடமும் விக்கியை பார்க்கும்போது பிரபுதேவா மாஸ்டர் மாதிரியே இருக்கேமா அப்படின்னு சொன்னேன் அவர்கள் காதலுக்கு மூல காரணமே நான் தான்” என்று கூறியுள்ளார்.

நடிகர் உதயா பானு அவர்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்து சினிமாவில் நடித்து வந்தாலும் அவர் வெளியே தெரிந்தது நானும் ரவுடி தான் படத்தின் மூலமாகத்தான். அதிலிருந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் அதன் பின்னர் ரசிகர்கள் அவரை ராகுல் தாத்தா என்று அன்போடு அழைத்தனர். அதன்பிறகு சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலமும் சில ரசிகர்களை தற்போது பெற்றிருக்கிறார் ராகுல் தாத்தா.