நஸ்ரியா நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சமூக வலைத்தளத்தில் அவருடைய புதிய புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார் இதைக்கண்டு நஸ்ரியா ரசிகர்கள் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.


நஸ்ரியா தமிழ் சினிமாவில் ரொம்பவே செல்லமான ஒரு நடிகையாக ரசிகர்கள் மனதில் பதிந்தார். இவருடைய படங்களில் தேவை இல்லாமல் கவர்ச்சி காட்டுவது, முத்தக் காட்சிகள் இப்படி எதுவும் இல்லாமல் குடும்ப ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு நடிகையாகவும் அழகு கொஞ்சும் ஒரு நடிகையாகவும் தமிழ்சினிமாவில் இருந்தார்.


தற்போது இருக்கும் தமிழ் சினிமா நிலைமையில் கவர்ச்சியை காட்டாமல் ஒரு நடிகை இவ்வளவு ரசிகர்களை பெற்றது என்றால் அது இவருக்குத் தான் முதல்முறை. எனவே இவரின் படங்களுக்கு எல்லாம் அப்போது தனி மவுசு இருந்தது. ஆனால் பகத் பாசிலை கல்யாணம் செய்துகொண்டு பிறகு சினிமா வாழ்க்கையை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
அந்த படத்தில் நாணி இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்குகளில் வருகிற ஜூன் 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலரும் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அனைவர் மத்தியிலும் பெரிய வரவேற்ப்பை பெற்றது. கிறிஸ்டியன் பெண்ணாக வரும் நஸ்ரியா பிராமண பையனான நானியை எப்படி காதலித்து கரம் பிடிக்கிறார் என்பதே அந்த கதை.


எனவே இந்த படத்திற்கு ரசிகர்கள் நிறைய பேர் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தனது புதிய புகைப்படங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார் நஸ்ரியா இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் குவித்த வண்ணம் உள்ளனர்.