சிவன்மலை கோவிலில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கோயில் நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டி உள்ளது.
தற்போது தமிழக கோயில்களில் ஆடை கட்டுப்பாடுகள் மிகவும் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆண்கள் ஷார்ட்ஸ் அணிவது. பெண்கள் துப்பட்டா இல்லாமல் ஆடை அணிவது. மேலும் லெக்கின்ஸ் அணிந்து கோவிலுக்கு வருவது.

இது போன்ற செயல்களை கோயில் நிர்வாகம் தடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி துப்பட்டா அணியாத பெண்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
துப்பட்டா இல்லாத உடை மற்றும் லெக்கின்சில் பெண்கள் கோவிலுக்குள் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
