நான் அந்த ஷோவில் தெரியாம அப்படி பேசிட்டேன் என்று ஒரு தனியார் சேனலுக்கு இன்டர்வியூ தந்திருக்கிறார் நீயா நானாவில் வசை பாடப்பட்ட பெண்மணி.
நீயா நானாவில் சென்ற வாரம் எபிசோடில் கணவனை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் என்ற டாபிக் வந்தது. இதில் கணவரை கேலி செய்யும் வகையில் அவருக்கு ஏபிசிடி கூட படிக்க தெரியாது என மிகவும் ஏளனமாக பேசினார் சீனி ராஜா என்பவரின் மனைவி பாரதி. இவர் இப்படி பேச இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கோபிநாத் அவர்களும் ஷோவுக்கு முன்பாகவே அவருடைய கணவருக்கு சிறந்த அப்பா என்று பரிசை அளித்தார்.
சோசியல் மீடியாவில் மிகவும் கலாய்க்கப்பட்ட ஒரு நபராக வலம் வந்தார் மனைவி பாரதி. இது தொடர்பாக இன்டர்வியூ ஒன்றில் பேசியுள்ள பாரதி அவர்கள் நான் அந்த ஷோ முடித்ததும் போனை தொடவே மிகவும் பயந்தேன். ஏனென்றால் அனைவரும் “நீ உன் கணவனை இப்படி நடத்தக்கூடாது” என எனக்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டனர். ஒரு வேலை நான் அதில் பேசியது தவறு தானோ என்றெல்லாம் யோசிக்க தோன்றுவிட்டது. என் கணவரிடம் நான் இதை கூறிய போதும் ஏபிசிடி படிக்க தெரியாது என்று நீ சொல்லிருக்கக் கூடாது அது தவறுதான் எனவும் கூறினார்.
Video Viral | திருவண்ணாமலையில் விநாயகர் கோவிலுக்கு வெளியே அமர்ந்து மது அருந்திய சாமியார்

அதனால் நான் மிகவும் அழுதுவிட்டேன். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அழுது அழுது தலைவலியே வந்து விட்டது என்றார். பிறகு அவருடைய குழந்தை தான் அம்மாவை சமாதானப்படுத்தி இருக்கிறார். மேலும் பேசிய பாரதி அவர்கள் எனக்கு இப்போ என்னுடைய கணவரை பார்த்த கும்பிடனும் போல இருக்கு. அவர் நல்ல கணவராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நல்ல அப்பாவா இருக்கிறார் என்று அடிக்கடி சொல்லுவேன். முன்னாடி எல்லாம் சும்மா எதார்த்தமா ஏதாவது கிண்டலா அவர் கிட்ட பேசுவேன் அவரும் ஏதும் நினைச்சுக்க மாட்டார். ஆனால் இப்போ பார்த்து பார்த்து தான் பேச தோணுது. மேலும் இப்ப அவர் மீது எனக்கு நிறைய மரியாதை வந்துடுச்சு என பாரதி கூறியிருக்கிறார்.
