பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்கள் தனது 77 வயதில் வயது மூப்பு காரணமாக இன்று அவரது வீட்டிலேயே உயிர் இழந்தார்.
நெல்லையை சேர்ந்த இவர் பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் ஆவார். இவர் தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகத் திறமை கொண்ட ஒரு மனிதராக வாழ்ந்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக தனது பொதுப்பணியை காங்கிரஸ் கட்சியின் மூலம் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு முதல் மேடைகளில் பேசியும் வந்தார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை நடத்தி அறிவார்ந்த விவாதங்களை இவர் முன் வைத்தார்.

தற்போது 77 வயது ஆன இவர் தனது வயது மூப்பு காரணமாகவும் மற்றும் நோய் தாக்கத்தின் காரணமாகவும் சில நாட்களாக அவதிப்பட்டு வந்திருந்தார். மேலும் கடந்த ஒரு சில தினங்களாக உணவு உட்கொள்ள முடியாமல் கடுமையான அவஸ்தை பட்டு வந்தார்.
அதன் பிறகு இன்று அவரது வீட்டிலேயே அவர் உயிர் பிரிந்தது. தற்போது இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியின் பொதுமக்களும் தமிழ் அறிஞர்களும் என பல தரப்பு மக்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
