நெல்லை கவின் காதல் பிரச்னை: சுர்ஜித்தின் வாக்குமூலம் சுர்ஜித்தின் வாக்குமூலம் கவினும் பாளையங்கோட்டையை சேர்ந்த அந்த பெண்ணும் பள்ளிக் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளதாக விசாரணையில் தகவல் வந்துள்ளது. கல்லூரி படிப்பு முடிந்தும் கவினின் காதலியான அந்த பெண் சித்த மருத்துவராக பணியாற்றி வந்த நிலையிலும் அவர்களது காதல் தொடர்ந்துள்ளது. கவினும் ஒருபுறம் IT துறையில் மாதம் 1 லட்சம் சம்பளம் கவின் தாய் தந்தை அரசு வேலை சொந்தவீடு என வாழ்ந்துவந்துள்ளார்கள்… இந்த காதல் பெண்ணின் பெற்றோருக்கு லேசாக தெரியவந்துள்ளது இதனை பெண்ணின் குடும்ப விசாரிக்க தொடங்கினார்கள்.
அப்போது தனது மகள் ஒரு பட்டியலினத்தவரை காதலிப்பதை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோரும் அவரது தம்பியும் இது நமக்கு ஒத்துவராது, நமது உறவினர்களுக்கு இந்த விவகாரம் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று அந்த பெண்ணிடம் கூறி காதலை கைவிட வைத்துள்ளனர். ஆனால், கவினோ தான் காதலித்த பெண்ணை மறக்க முடியாமல், தொடர்ந்து அவரை காதலிக்கச் சொல்லியும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றும் தொடர்ந்து பேசி வந்துள்ளார். தன்னுடைய சகோதரி கவினை காதலிக்க மறுத்தும், தொடர்ந்து அவரை கவின் வற்புறுத்தி வருவதாக நினைத்து, அந்த பெண்ணின் தம்பியான சுர்ஜித் அவரை திட்டமிட்டு அழைத்துச் சென்று ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்.
நெல்லை கவின் கதையை முடித்துள்ளார், காவல் நிலையத்திலும் சுர்ஜித் சரணடைந்துள்ளார். கைதான நபரின் பெற்றோர் இருவரும் உதவி காவல் ஆய்வாளர்களாக இருந்து வரும் நிலையில் அவர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஐஜி விஜயலட்சுமி பிறப்பித்துள்ளார்.
கைதானது எப்படி? சம்பவம் நடந்தது எப்படி :
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார் வயது 28 இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர், சொந்த ஊருக்குச் செல்வதற்காக இருவரும் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த சுர்ஜித் கவின்குமாருடன் தகராறு செய்துள்ளார்.தான் மறைத்து வைத்திருந்த சாமானை எடுத்து கவினை வீழ்த்தியுள்ளார்.
ராமதாஸ் அறையில் ஒட்டுக்கேட்கும் கருவி அன்புமணி நிஜ முகம் வெளிவந்தது
சுர்ஜித் கூறிய வாக்குமூலம் என்ன ?
என் சகோதரி அந்த கவின்குமார் காதலித்து வந்தார்கள். இதற்கு இரு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். நானும் என் சகோதரிக்கு அறிவுரை வழங்கினேன். ஆனால் அவர் கேட்காமல் கவினுடன் பழகி வந்தார். தனது சகோதரி சித்த மருத்துவராக இருப்பதால். அவர் பணியாற்றும் மருத்துவமனைக்கு கவின்குமார் அடிக்கடி அவரது தாத்தாவை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்கு வருவார். அது போல் சம்பவம் நடந்த நாளன்று, கவின்குமார், தனது சகோதரியிடம் பேசியதை நான் தெரிந்துகொண்டேன். இதையடுத்து அவர் வழக்கமாக செல்லும் வழியில் காத்திருந்தேன். அப்போது கவின் கதையை முடித்து அங்கிருந்து காவல் நிலையத்தில் சரணடைந்தேன் என தெரிவித்திருந்தார்.

தாய் கூறியதால் சம்பவம் செய்தேன் :
சுர்ஜித்தை அவரது தாய் தந்தை தூண்டிவிட்டதால்தான் இந்த சோகம் நடந்துவிட்டது. எனவே அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கவினின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கவினின் உடலை பெறவும் மறுத்துள்ளனர். இந்த நிலையில் டிஐஜி விஜயலட்சுமி, உதவி காவல் ஆய்வாளர்களான கிருஷ்ணவேணியையும், சரவணனையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
நடுவயதில் கத்திய பெண் கரப்பான் பூச்சி! உடனே என்ன நடந்தது தெரியுமா
இயக்குனர் மாரி செல்வராஜ் :
நீளும் சாதிய அருவருப்பின் ஆட்டம்… சமூக ரீதியான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்.
இயக்குனர் பா ரஞ்சித் :
தென்மாவட்டங்களில் தொடரும் சாதிய தீண்டாமை சம்பவங்களுக்கு #நீலம்பண்பாட்டுமையம் வன்மையாக கண்டிக்கிறது! நெல்லையில் இளைஞரை இவ்வாறு செய்துள்ள குற்றவாளிகள் அனைவரையும் மீதும் நடவடிக்கை எடுத்து #நீதிவழங்கிடவேண்டும்!
இசையமைப்பாளர் GV பிரகாஷ் :
இது ஒரு பாவச்செயல், இது ஒரு பெருங்குற்றம், இது ஒரு மனிதத்தன்மையற்ற செயல் Rest in peace #கவின்குமார்
திருமாவளவன் Lok Sabha MP :
திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் கவின் மீது நடந்த துயர சம்பவம், உடந்தையாக இருந்த பெற்றோரைக் கைது செய்ய வேண்டும்! துயர சம்பவத்தை தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும்.
தொல்.திருமாவளவன் அறிக்கை :
மென்பொறியாளர் கவினுக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த கவினும் சுபாசினி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இதனையறிந்த சுபாசினியின் பெற்றோர் கவின்குமாரையும் அவரது பெற்றோரையும் எச்சரித்துள்ளனர். அதனால் கவின்குமாரின் பெற்றோர் கவின்குமாரை கண்டித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கவின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலியில் சித்த மருத்துவராக தான் பணியாற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் கவினின் தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என சுபாஷினி தெரிவித்ததன் அடிப்படையில் சுபாஷினியிடம் ஆலோசனை பெறுவதற்கு கவின் அவரது அம்மா மற்றும் மாமா ஆகிய மூவரும் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர்.
சிகிச்சை மையத்தின் உள்ளே சுபாஷினியிடம் கவினின் அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த கவினை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தனது வீட்டு வாசலில் வைத்து கவினை சம்பவம் செய்துள்ளான். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்ததாக தெரியவருகிறது. இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த சுபாசினியின் பெற்றோர் அவர்களை காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். மேலும் அவர்கள் காவல்துறையில் பணியாற்றுவதால் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இவ்வாறு நடைபெறுவது வேதனையளிக்கிறது. இதை தடுப்பதற்கு காவல்துறையில் ஒரு தனி நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிறோம். இந்த சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. திருமாவளவன் Lok Sabha MP கூறியதாவது இந்த சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும். கவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்