பறையர் என்ற வார்த்தையைப் பயன் படுத்தியதால் அண்ணாமலை கைது ?

பறையர் என்ற வார்த்தையைப் பயன் படுத்தியதால் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரு நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்று 8 ஆண்டுகாலம் தற்போது முடிவடைந்ததால் 8 ஆண்டு கால சாதனை விளக்க அண்ணாமலை அவர்கள் ஒரு டீவீட்டை பதிவு செய்திருந்தார். அதில் அவர் கூறியது என்னவென்றால் பறையரிலிருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் நரேந்திர மோடி என குறிப்பிட்டிருந்தார். இதில் பறையர் என்ற சொல்லை அவர் ஏன் குறிப்பிட வேண்டும் என்று பலர் அவரின் கருத்துக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து எதிர்ப்பு வந்தது.

இதனால் பல பேர் மனம் உடைந்து போவார்கள் என அப்போது பலர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆமா முக தலைவர் பசும்பொன் பாண்டியன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது பேச்சாலும் செயலாலும் சாதி மத கலவரத்தை உண்டாக்குவது போல் நடந்து கொள்கிறார். மேலும் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கும், தொழில்நுட்ப சட்டத்தின் கீழ்ம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவரிடம் தமிழகம் அமைதி பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது ஆனால் அவர் பேசும் சில பேச்சுக்கள் மத மோதல்களையும் சாதி மோதல்களை தூண்டும் வகையில் இருக்கிறது. ஆதாரமற்ற பல காரியங்களை அவர் செய்து வருகிறார். இதற்கு முன்னர் கூட மாணவி லாவண்யா வழக்கை சாதி சாயம் பூசி திசை திருப்ப பார்த்தார். ஆனால் அதில் கூட எந்தவிதமான ஆதாரமும் அவர்களிடம் இல்லை. வேண்டுமென்றே சாதி மத அரசியலையும், மோதலையும் அவர் நடத்தி வருகிறார். இப்படி வன்முறைகளைத் தூண்டும் வகையில் அவர் செயல்பட்டால் அது நாட்டிற்கு நல்லதல்ல எனவே இதுகுறித்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

Watch Video | ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர் | அதிர்ச்சியூட்டும் CCTV காட்சி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் ஓட்டுனரை அரிவாளால் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா | இலங்கையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது

இலங்கையில் தொடர்ந்து போராட்டம் மற்றும் கலவரங்கள் நடந்து கொண்டிருப்பதால் இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த

“பொண்டாட்டிய சந்தோஷப்படுத்த எத்தனையோ வழி இருக்கு …. அதுக்குன்னு இந்துவ பத்தி தப்பா பேசுவானா அவன் ?….” PTR பற்றி அவதுறாக பேசிய எச்.ராஜா

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை மிகவும் மோசமாக விமர்சித்திருக்கும் எச் ராஜாவுக்கு தற்போது கண்டனங்கள் எழுந்த