ஹரித்வாரில் தாயொருவர் மகனை சீக்கிரம் குழந்தை பெற்றுத்தர சொல்லுங்கள் என நீதிமன்றத்தை நாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம் அன்றாட வாழ்வில் பல வினோதமான நிகழ்வுகளை கண்டிருப்போம் சிலருக்கு சில வினோதமான விஷயங்களுக்காக நீதிமன்றத்தை நாடுவார்கள்.

அப்படி ஹரித்வாரில் வித்தியாசமாக ஒரு காரணத்திற்காக நீதிமன்றத்தை நாடி இந்த தாய் அவர் கூறியது என்னவென்றால் :- “2 கோடி செலவு செய்து மகனை விமானி ஆக்கினேன் 2016இல் திருமணம் செய்து தாய்லாந்துக்கு தேன்நிலவு அனுப்பினேன். இப்போதுவரை அவனுக்கு குழந்தை இல்லை ஆகவே இன்னும் ஒரு வருடத்தில் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று நீதிபதி நீதிமன்றத்தில் உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் 5 கோடி இழப்பீடு எனக்கு வாங்கித் தாருங்கள் என மகன் மீது ஹரித்துவாரில் ஒரு தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இது தற்போது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
