கேரளாவை அடுத்து தமிழகத்திலும் சவர்மாவால் 3 மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு மாணவி சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவியோடு சேர்ந்து 14 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

விசாரித்ததில் அந்த கடையில் பழைய கெட்டுப்போன மாமிசத்தை வைத்து அந்த சவர்மா செய்திருப்பதால் இம்மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். தற்போது அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாடு தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
ஒரத்தநாடு பகுதியில் துரித உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து மூன்று கால்நடை கல்லூரி மாணவர்களையும் தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
