நிதி அகர்வால் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் ஒரு நடிகையாக இருக்கிறார். பூமி படத்தில் நடித்ததன் மூலம் முதன்முதலில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நிதி அகர்வால். அதற்குப் பின்பு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு சிம்பு மற்றும் நிதி அகர்வால் இருவரும் காதலிக்கின்றனர், விரைவில் பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களுக்கு கல்யாணம் நடக்கப் போகிறது என்ற பேச்செல்லாம் அடிபட்டது. ஆனால் இதெல்லாம் வதந்திதான் என்று ஒரு இடத்தில்கூட அவர்கள் வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில் நிதி அகர்வால் அவர்களின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஆணுறை விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அதில் ஆணுறையின் சிறப்பைப் பற்றியும் அந்த ஆணுறை அணிந்து கொள்வதால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் பேசி உள்ளார். பெண்களுக்கு நல்ல சுகத்தை தரும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் இது தேவையானது என்று அந்த காண்டம் விளம்பரத்தில் பேசியுள்ளார்.

இதைப்பார்த்த அவரின் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செக்க்ஷனில் எதற்கு காண்டம் விளம்பரத்தில் எல்லாம் நடிக்கிறீர்கள் என்று ஒருபுறம் அவரை திட்டினாலும், மறுபுறம் இம்மாதிரியான ஆணுறை பற்றின விழிப்புணர்வு மிகவும் அவசியம். அதை ஒரு நடிகை கையிலெடுத்து செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது. இந்திய அரசே ஆணுறை பற்றி விழிப்புணர்வை செய்து வருகிறது. அதனால் இதில் தவறு ஏதும் இல்லை என ஒருபுறம் அவரை பாராட்டியும் வருகின்றனர்.