அமெரிக்கா டாலருடன், இந்திய ருபாய் வீழ்ச்சி அடைந்ததை நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள் ? | சர்ச்சை பேச்சை வெளியிட்ட நிர்மலா

அமெரிக்கா டாலர்க்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பை இழந்ததால் நீங்கள் ஏன் வருத்தப்படுகீர்கள் இந்திய மதிப்பு படி தானே நீங்கள் வீட்டிற்கு மளிகை சாமான் வாங்குவீர்கள் ? என்று பரபரப்பாக பேசியுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2020 ஆம் ஆண்டில் கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் வீழ்ச்சி அடைந்தது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு பிறகு கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதனால் நாடு மீண்டும் எழுச்சி பாதைக்கு திரும்பியதால், பொருளாதார வீழ்ச்சி சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு பிறகு பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் பழையபடி வளர்ச்சி அடையத் தொடங்கியது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளும் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து ஒரு மதிப்பீட்டை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

நாம் அன்றாடம் நம்பும் சில மூட நம்பிக்கைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை

தற்போது இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நம்பிக்கை கோரும் வகையில் பேசியுள்ளார். நியூ தேவலப்மன்ட் பங்க் வங்கியின் ஏழாவது வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய அவர் நடப்பு 2022-23 நிதி ஆண்டில் இந்தியா 8.9 சதவீதம் வளர்ச்சி அடையும், மேலும் அடுத்த நிதியாண்டு 2023-24 வருடம் நிதியாண்டில் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும் அமெரிக்கா டாலர்க்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பை இழந்ததால் நீங்கள் ஏன் வருத்தப்படுகீர்கள் இந்திய மதிப்பு படி தானே நீங்கள் வீட்டிற்கு மளிகை சாமான் வாங்குவீர்கள் ? என்று பரபரப்பாக பேசியுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சில நாட்களுக்கு முன்னால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வறிக்கை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டது. அதில் 2022ஆம் ஆண்டில் இந்தியா 6.4 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த நிதியாண்டில் அதி வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இந்தியாதான் முன்னணியில் இருக்கும் எனவும் அந்த சபை கூறியிருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கொரோனா பாதிப்பில் இந்தியா சந்தித்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர இன்னும் 14 ஆண்டுகள் ஆகும் என கூறியுள்ளது.

Spread the love

Related Posts

Viral Video | இந்திய மாணவர்களை தாக்கும் உக்ரைன் ராணுவம் | இந்தியர்களை காப்பாற்ற மத்திய அமைச்சர்கள் உக்ரைன் பயணம்

உக்ரைன் நாட்டில் கடந்த 5 நாட்களாக ரஷ்யப் படைகள் தாக்கி வருகின்றன. இதனால் அங்கு இருக்கும்

குலுக்கல் முறையில் அதிமுகாவை வென்ற பாஜக

பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவை சேர்ந்த வேட்பாளர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளராக