கைலாச அதிபர் நித்தியானந்தா 200 ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழப்போகிறேன் என்று தாம் உறுதியாக நம்புவதாக பதிவிட்டுள்ளார் நித்தியானந்தா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அவர் சமாதி நிலையில் இருப்பதாகவும், உடலை விட்டு உயிர் பிரிந்து பிறகு மீண்டும் அதே உடலில் வந்து சேருவேன் எனவும் குட்டி நித்யானந்தாவாக வலம்வருவேன் எனவும் தனது அதிகாரபூர்வ வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார் நீண்ட அயிலும் சுறுசுறுப்பான வாழ்க்கையும் குரு அருணகிரியை மட்டுமே சார்த்துள்ளதாக பரமசிவ நீண்ட மகிழ்ச்சியாக சுறுசுறுப்பான மகிஷ்ச்சியான வாழ்க்கைக்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், இன்னும் 200 வருடங்கள் இந்த உடலை நான் சுமப்பேன் எனவும் நான் இந்த உடலில் நிலைபெற்று உறுப்புகளை சுறுசுறுப்பாகவும் ஆரோகியமாகவும் நிர்வாகல்ப சமாதி முதல் சகஜ சமாதி வரை செயல்படுவதை என்னால் பார்க்க முடிகிறது எனவும் தெரிவித்துள்ளார். 200 ஆண்டுகள் கடந்து சுறுசுறுப்பாக இளமையுடன் வாழப்போகிறேன் என உறுதியாக நம்புவதாகவும் பரமசிவ தன் குழந்தையை பாதுகாக்கும் தாய் கங்காருவை போன்றவர் அவர் தன்னை சமாதியில் வைத்து அவர் தன் உள்ளத்தில் வைத்து பாதுகாக்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார்

