சமாதியில் இருப்பதாக சொன்ன நித்யானந்தா கோமாவில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரின் சிஷ்யைகளோ அதை மறுத்துள்ளனர்..என்ன தான் ஆச்சு நித்தியானந்தாவுக்கு
இந்துக்களுக்கென தனி நாட்டை உருவாக்கப் தனி கரன்சி , தனி பாஸ்போர்ட் என பரபரப்பை ஏற்படுத்தியவர் நித்தியானந்தா ஒவ்வொருநாளும் ஒவ்வொரு சத்சங்கம், ஒரு வீடியோ, கிண்டலான பேச்சு என இணையத்தை கலக்கிவந்தவர் நித்யானந்தா, கடந்த ஏப்ரல் மாதம் 13அம தேதி திடீரென சமாதியில் இருக்கிறேன் என அதிர்ச்சி கொடுத்தார் நித்தியானந்தா அதிலிருந்து பல செய்திகள் உலா வந்தது நித்தியானந்தா இறந்துவிட்டார் என்று அதனை மறுத்து மக்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக எனக்கு ஒன்றும் ஆகவில்லை அனால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை என பதிலளித்தார் நித்யானந்தா, அதன் பிறகு வெளியானது அவரது புகைப்படங்கள்

உடல் மெலிந்த நிலையில் தரையில் மயக்கநிலையில் கிடைக்கும் புகைப்படங்கள் புகைப்படத்தை பார்த்த மக்கள் திரும்பவும் நித்தியானந்தா இறந்த்துவிட்டார் அவருடைய கடைசி புகைப்படம் இது என பல கேள்விகளை எழுப்பிவருகிறார்கள்அதற்க்கு 48 நாட்களாக சமாதியில் இருக்கிறேன் என்று பதிலளித்தார் நித்யானந்தா, அப்படி எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்த நித்யானந்தா இப்பொது எங்கே சென்றார்…என்ன அனைத்து அவருக்கு என மர்மம் இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது, அவர்களது சிஷ்யைகள் விளக்குகளை ஏற்றிவைத்து வழிபாடு செய்துவருகிறார்கள், அவரது நெருங்கிய சிஷ்யை நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவின் புகைப்படங்களை பதிவு செய்து பிராத்தனை செய்து வருகிறார் இதனால் மக்களிடையையே சலசலப்பு எழுந்துள்ளது
