சென்னை தீவு திடலில் உணவு அரங்கம் அமைக்கப்பட்ட இடத்தில் பீப் பிரியாணி ஸ்டால் இல்லாததை குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தீவுத்திடலில் சிங்கார சென்னை உணவுத் திருவிழா இன்று தொடங்கி வருகிற 14-ஆம் தேதி வரை நடக்கிறது. இதனுடைய துவக்க விழாவில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியமும் சேகர்பாபுவும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சென்னை உணவுத் திருவிழா என்கிற ஒரு தலைப்பில் தொடங்கப்பட்ட இந்த மூன்று நாட்கள் உணவு விழாவில் தமிழகத்தில் பாரம்பரியமான உணவு வகைகளை இங்கு சுவைக்கலாம் உடல் நலவுக்கு பாதிப்பு ஏற்படாத உணவுகள் இங்கு காட்சியமைக்கப்படும் 150 அரங்குகள் மூலம் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் உடல் நலத்திற்கு பாதிப்பு தரக்கூடிய எந்த உணவுகளையும் நாங்கள் தவிர்த்து முடிந்தவரை பாரம்பரிய சிறுதானிய உணவுகளையே இங்கு வைத்திருக்கிறோம். இதை உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் விழிப்புணர்வு செய்திருக்கிறார். மேலும் உணவு குறித்து பல்வேறு விஷயங்களை பரிமாறிய மா சுப்பிரமணியன் அவர்களிடம் செய்தியாளர்கள் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி ஸ்டால் மட்டும் இருக்கிறது, ஏன் பீப் பிரியாணி ஸ்டால் மட்டும் இல்லை என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர் எனக்கு பீப் பிரியாணி எனக்கும் ரொம்ப பிடிக்கும் நானும் அதை விரும்பி சாப்பிடுவேன். ஆனால் உணவு என்பது தனி மனித உரிமை பீப் பிரியாணி அரங்கம் அமைக்க எங்களிடம் யாரும் எந்த கடை ஊழியரும் வந்து அனுமதி கேட்கவில்லை. அதனால் நாங்களும் அனுமதி கொடுக்கும் நிலையில் இல்லை என தெரிவித்திருந்தார்.
