மகளை பள்ளியில் சேர்க்க சாதி சான்றிதழ் கேட்டதால் | “சாதி, மதம் இல்லை” என்ன சான்றிதழை வாங்கி அசத்தியிருக்கிறார் அப்பா

கோயம்புத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது 3 வயது மகளை “சாதியில்லை மதமில்லை” என ஒரு சான்றிதழை வாங்கி இருக்கிறார் மேலும் சாதி அற்றவள் என்ற அடையாளத்தில் இருக்கும் பள்ளியில் சேர்க்க தீர்மானிதுள்ளர்.

ஒரு சிறிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணிபுரியும் நரேஷ் கார்த்திக் என்பவர் தனது மூன்று வயது மகளை பள்ளியில் சேர்க்க விரும்பும் போது சாதி மற்றும் மதம் என்ற பெட்டிகளில் எதுவும் எழுதாமல் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவரின் விண்ணப்பத்தை அனைத்து பள்ளிகளும் நிறுத்தி வைத்தனர். இதனால் கோபமடைந்த அவர் தன்னுடைய குழந்தைக்கு எந்த ஜாதியும் மதமும் இல்லை என்று கூறி விண்ணப்பித்து அந்த சான்றிதழை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது என்னவென்றால் :- “1973 ஆம் ஆண்டு பின்னர் 2000 ஆவது ஆண்டில் மாநில அரசு ஆணை பிறப்பித்தது இது சாதி மற்றும் மத வரிசைகளை காலியாக விட அனுமதிக்கிறது. ஆனால் பள்ளி அதிகாரிகளுக்கு இது பற்றி தெரியாது. ஆணை நகல்களை அதிகாரிகளிடம் காட்டும்போது அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வெவ்வேறு சமூகங்களில் இருந்து பள்ளி சேர்க்கை மற்றும் இடைநிறுத்தம் குறித்த புள்ளி விவரங்களை அரசாங்கத்திடம் வழங்க வேண்டிய விவரங்கள் தேவை என்று வலியுறுத்துகின்றனர்.

சென்னையில் ரோஸ் மில்க் குடித்ததால் சிறுவன் உயிரிழப்பு | உண்மை காரணம் என்ன என போலீசார் விசாரணை

என்னை புள்ளி விவரங்களில் இருந்து விலகி விடுங்கள். அல்லது எங்களை போன்றவர்களுக்கு தனிப்பிரிவு உருவாக்குங்கள் என்று நான் அவரிடம் கேட்டபோது அவர்கள் மறுத்து விட்டனர். அதனால் எந்த சாதி, மதத்தை அறிவித்ததில் இருந்து விலக்கு அளிக்கும் சான்றிதழ் பெற இது வழிவகுத்தது மேலும் அவர் தன்னுடைய மகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு 22 தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது என்னுடைய மகளை நான் பள்ளியில் சேர்க்கும் போது மதம் மற்றும் சாதி வரிசை காலியாக இருக்கிறது என்று என்னுடைய விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

தன்னுடைய மகளை நான் எங்கு அனுப்ப வேண்டும் என்று முன்னரே தீர்மானம் செய்து விட்டேன். அதனால் என்னுடைய மகளுக்கு அந்த விண்ணப்பத்தில் அந்த இடங்களை மட்டும் காலியாக விட்டால் என்ன நடக்கும் என்று நான் பார்க்க விரும்பினேன். ஒருவரின் சாதி மற்றும் மதத்தை பொதுவெளியில் கேட்பது அவசியமற்றது எனக் அவர்கள் அறிய வேண்டும். இது அதிகாரிகளின் தவறல்ல கல்வி முறையால் தான் இதுபோன்ற தவறுகளை மக்கள் அறியாமல் உள்ளனர். ஆனால் கல்வி தான் தன்னை சாதி எதிர்ப்பு நாத்திக சித்தாந்தத்திற்கு அழைத்து செல்கின்றது. எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை நான் பல்வேறு புனித நூல்களையும் மதநூல்களையும் கடந்து படித்தேன்.

அவர்கள் அனைவருக்கும் பொதுவாக நான் கண்டது என்னவென்றால் அவர்கள் பெண்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சிக்கு எதிரானவர்கள். சாதி என்பது மதத்தின் விலை பொருளாகும் ஒருவர் பிறப்பின் அடிப்படையில் குறைந்தவர் மற்றொரு உயர்ந்தவர் என கூறுவது எப்படி நியாயமாகும் ? பாரதியார், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் எழுத்துக்களும், திருக்குறளும் எனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த உதவியது. ஒருவருக்கு ஒரு தார்மீக வழிகாட்டி தேவைப்பட்டால் அவர்கள் மதத்திற்கு மாறினால் திருக்குறளும் அதையேதான் கூறுகிறது. எனது மகளுக்கு இந்த சான்றிதழை பெறுவதன் மூலம் இதுபோன்ற ஒரு செயல் முறை இருப்பதை பற்றி விழிப்புணர்வு மக்களுக்கு தெரியவரும். அதனால் தான் நான் இதை செய்தேன்” என கூறினார்.

Spread the love

Related Posts

“ஆ.ராசா வாகிய நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், அனால் எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் ?” – மீண்டும் ஆரம்பித்த ஆ ராசா

இந்துக்களைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா அவர்கள் மன்னிப்பு கேட்கிறேன் என்பது போல கூறி

“குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ருபாய் எப்போது தருவீர்கள்” என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அங்கிருந்து நடையைகட்டிய உதய்

கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலினிடம், ஆயிரம் ரூபாய் குடும்ப பெண்களுக்கு எல்லா மாதமும்

“படத்தில் என் தலையை வெட்டும்போது மட்டும் லோகேஷ் சதோஷமா இருந்தாரு” | பகீர் கிளப்பிய விக்ரம் பட நடிகை காயத்ரி

விக்ரம் படத்தில் மத்த காதல் காட்சிகளில் தலையிடாத லோகேஷ் கனகராஜ் என்னுடைய தலையை வெட்டும் போது