முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் கூறி இருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் சார்பில் ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் ஆஜராகி பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார். “ஜெயலிலதாவின் மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன், அன்றும், இன்றும் எனக்கு சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது” என்று கூறியுள்ளார் அவர் அளித்த வாக்குமூலம் தற்போது அதிமுகவினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது