அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை அதிரடியாக நீக்கி உள்ளது தலைமை கழகம்
கட்சியிலிருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கி சிறப்பு தீர்மானத்தை பொதுக்குழுவில் இன்று அதிமுக அறிவித்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி, பிரபாகர் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் கொள்கைக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு உள்ளதால் அவரை நீக்கி உள்ளதாக பொதுக் குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
