Latest News

ஓரியோ பிஸ்கட் விளம்பரத்தில் டோனி பங்கேற்ற அடுத்த கணமே தனது நாய்க்கு ஓரியோ என பெயர் வைத்து கம்பிர் வீடியோ வெளியிட்டதால் சர்ச்சை

ஓரியோ பிஸ்கட்டால் தான் 2011 உலகக் கோப்பை இந்தியா வென்றது என தோனி கூறிய அடுத்த கணமே ஓரியோ என தனது நாய்க்கு பெயர் வைத்து கம்பிர் வீடியோவை வெளியிட்டுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.

வெகு நாட்களுக்குப் பிறகு எம் எஸ் தோனி ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறார். ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பு இரண்டு மணிக்கு வெளியாகும் எனவும் கூறியிருந்தார். இதனால் தோனி ஏதாவது புதிய அறிவிப்பை தான் வெளியிடுவார் என அனைத்து தரப்பு ரசிகர்களும் காத்திருந்தனர். அவர்களை ஏமாற்றும் அவர் ஓரியோ பிஸ்கட் புதிதாக இந்தியாவில் வெளியாக போகிறது என்று அறிவிப்பை வெளியிட்டு சப்பையாக அதை முடித்தார்.

“ஆம்னி பேருந்து கட்டணம் ஏழை எளிய மக்களை பாதிக்கவில்லை” – அமைச்சர் சிவசங்கர்

ரசிகர்கள் அனைவரும் இந்த ஓரியோ விளம்பரத்திற்காகவா அப்படி ஒரு எதிர்பார்ப்பை கொடுத்தீர்கள் என்று சில ரசிகர்கள் சோகத்தில் பதிவிட்டு வந்தனர். அந்த ஒரு ஓரியோ பிஸ்கட் தொடக்க விழாவில் 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது தான் ஓரியோ பிஸ்கட் வெளியானது என்றும் உலகக்கோப்பை வெற்றிக்கு ஓரியோ பிஸ்கட் தான் ஒரு முக்கிய காரணம் என்று அதற்கு கிரெடிட் கொடுத்து ஜாலியாக பேசினார் தோனி.

தற்போது 2022 இல் இந்தியாவில் நான் இதை அறிமுகம் செய்கிறேன் அப்போ ??… அப்படி என்று அந்த உரையை முடித்தார். இந்த வருடம் 2022-ல் ஒரு உலகக்கோப்பை நடக்கிறது. அதிலும் இந்தியா பங்கேற்கிறது. அதனால் இந்த வருடம் ஓரியோ பிஸ்கட் வெளியிடும்போது இந்தியா உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என மறைமுகமாக கூறியிருந்தார். இது ஒருபுறமிருக்க மற்றொரு புறம் டோனி எதை செய்தாலும் அதை வம்பு இழுக்கும் விதமாக நடந்து கொள்ளும் கௌதம் கம்பீர் அவர்கள் தன்னுடைய மகள் பிறந்தநாள் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் தன்னுடைய ஒரு நாயை ஓரியோ என்று கம்பீர் அழைக்கிறார். அதாவது டோனி இதற்கு முன் ஓரியோ பிஸ்கட் பற்றி பேசியதுமே தன்னுடைய நாய்க்கு ஓரியோ என்ன கம்பீர் பெயரிட்டு இருக்கிறார் என்று கம்பீர் மீது தோனி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக கம்பீரின் ரசிகர்கள் ஏற்கனவே அந்த நாய்க்கு அவர் ஓரியோ என்று பெயரிட்டு விட்டார். அவருடைய மகளின் பிறந்த நாளுக்கு அவர் எப்போதுமே வாழ்த்து கூறுவார். அந்த வீடியோவில் அவர் தன்னுடைய நாயை ஓரியோ என்று அழைக்கிறார். ஏனென்றால் அந்த நாயின் உண்மையான பெயரே ஓரியோ தான் என தெளிவுபடுத்தியுள்ளனர் அதனால் வீணாக கம்பிரை இதில் இழுக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

Spread the love

Related Posts

டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதி

டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதி. காய்ச்சலால்

மீனாவின் கணவர் உடலை பார்க்க வந்த ரஜினி | மனமுடைந்து மார்பில் விழுந்து கதறி அழுத மீனா | தாங்க முடியாத துயரத்தில் ரஜினி

கொரோன தொற்று காரணமாக நடிகை மீனாவின் கணவர் இரு வாரங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக

“ஹிந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை” | தெலுகு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தடாலடி பதில்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என தடாலடியாக பதிலளித்து

Latest News

Big Stories