அட நம்ம ரஞ்சித்தா இது ? நெத்தியில் காவி போட்டு, தலையில் தலைப்பாகை அணிந்து கொண்டு ஒரு ராஜஸ்தான் படத்தில் தமிழ் இயக்குனர் ரஞ்சித் நடித்ததாக ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார், என்னதான் இவர் அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை எடுத்திருந்தாலும் ரஜினியின் காலா கபாலி படத்தின் மூலம் இவர் பெற்ற ரசிகர்கள் மிகவும் அதிகம். அந்த அளவிற்கு அப்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பா. ரஞ்சித் பெரிதாக பேசப்பட்டார். ஏனென்றால் பா.ரஞ்சித் ஒரு ரஜினி ரசிகர் அதனால் அவர் ரஜினியை வைத்து எடுத்தால் எப்படி மாசாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருந்த காலம் அது.

ஆனால் இப்போதோ அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இப்போது பா ரஞ்சித் அவர்கள் உச்சம் தொட்ட ஒரு இயக்குனராக வளம் வந்து வருகிறார். ஆனால் ரஜினி கடந்து இரண்டு வருடங்களாக ஒரு சரியான ஹிட் படம் கொடுக்க முயற்சித்து வருகிறார். ஆனாலும் ரஜினியின் ரசிகர்கள் பட்டாளம் எப்போதுமே தமிழ் சினிமாவில் உயர்ந்ததாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி அவர்கள் தமிழக ஆளுநரை சந்தித்து பேசியது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது.
அவரை வைத்து படம் பண்ணிவிட்டு பின்னர் அவரை பற்றி விமர்சனம் கூறுவது தவறு என ரஜினி ரசிகர்கள் கூறிவந்தனர். அதற்கு பதில் கொடுக்கும் வகையில் ரஞ்சித் மட்டும் இல்லை என்றால் ரஜினி எப்போதோ மறைந்து போயிருப்பார் என்று கூறி வருகின்றனர். ஆனால் ரஜினி ரசிகர்களோ ஒன்றுமே இல்லாமல் அட்டை கத்தியாக சுற்றிக் கொண்டிருந்த பா ரஞ்சித்திற்கு காலா கபாலி போன்ற படங்களை இயக்க வாய்ப்பளிக்க ரஜினி இல்லை என்றால் இன்னும் ஏதோ ஒரு வடக்கு படங்களில் இப்படியான கதாபத்திரங்களில் தான் இவர் நடித்திருப்பார் என்று ரஞ்சித் இருப்பது போல ஒரு வீடியோவை பகிர்ந்தனர்.

அந்த வீடியோவில் ராஜஸ்தான்காரர்களைப் போலவே மேக்கப் அணிந்திருக்கும் பா ரஞ்சித் அவர்கள் காவி போட்டு நெற்றியில் அணிந்து வடக்கர்களைப் போல தலைப்பாகையை சுற்றிக்கொண்டு பேசுகிறார். இது எந்த படம் என்று பெயர் சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நம்ம புரட்சி இயக்குனர் பா ரஞ்சித்தா இது ?? இவரும் ஒரு காலத்தில் சங்கியாக தான் இருந்திருக்கிறார் என தற்போது கூறி வருகின்றனர். அனால் இந்த வீடியோ எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
பா ரஞ்சித்தும் ஒரு காலத்துல சங்கியா தான் இருந்து இருக்காப்ல😀😀😀😀 pic.twitter.com/ANU3yp3RcV
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) August 11, 2022