சேலம் எட்டு வழி சாலை பற்றி எங்கள் ஆட்சியில் எதிர்த்து விட்டு தற்போது அதற்க்கு ஆதரிக்கின்றனர் திமுக | கிழித்து தொங்கவிட்ட EPS

சேலம் மாநகராட்சியில் தையல் மையத்தை திறந்த எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் :- “மக்களைப் பற்றியோ மக்களின் வாழவியலை பற்றியோ சிந்திக்காமல் மெத்தனப் போக்கில் இருக்கிறது இந்த திமுக அரசு. தேர்தல் வாக்குறுதிகளை கூறியவற்றை 70% கூட இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறது. மேலும் கொரோன காலத்தில் மக்கள் பாதிப்புக்குள்ளாகி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் சொத்து வரியை மேலும் மேலும் உயர்த்தி வருகின்றது இந்த அரசு.

கலைஞரின் பிறப்பிடமான திருவாரூரில் அண்ணாமலைக்கும், பாஜகவுக்கும் குவிந்த கூட்டம் | பீதியில் திமுக | அண்ணாமலை பேசியது என்ன ?

டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மையமாக அறிவித்து சட்டம் நிறைவேற்றிய அரசு அதிமுக. அங்கு விவசாயம் பாதிக்கும் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. நிதி ஆதாரத்தை திரட்ட அந்த அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. இதனால் விரைவில் போக்குவரத்தை கட்டணமும் மின் கட்டணமும் கிடுகிடுவென உயரும். அரசு ஊழியர்களின் ஓய்வு பெற்றவர்களையும் நம்ப வைத்து திமுக கழுத்தருகிறது. வீடு கட்டுபவர்கள் மிகப்பெரும் சோதனையை சந்திக்க வைக்கிறது. செங்கல் சிமென்ட் கம்பி விலை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை எல்லாம் திமுக அரசு உயர்த்தி விட்டது.

மேலும் சென்னையில் மாற்று இடம் ஒதுக்காமல் இருப்பவர்களை அகற்றுவது மிகவும் வேதனை அளிக்கிறது. சொந்த நாட்டில் அகதிகளாக வாழு நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தள்ளப் பட்டிருக்கின்றன. அதிமுக ஆட்சியில் சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு அப்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தனர். ஆனால் இப்போ கூட்டணி கட்சி என்பதால் அனைத்து கட்சிகளும் மௌனம் சாதிக்கின்றன. உள்கட்டமைப்பு மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசின் எட்டு வழி சாலை திட்டத்தினை அதிமுக அரசு ஆதரித்தது.

எட்டு வழி சாலை திட்டத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் வரப்போவதில்லை. விவசாயிகளுக்கு எதிரான கட்சியல்ல அதிமுக மாறாக அவர்களுக்கு இழப்பீடு வழங்கி கொடுத்திருக்கிறோம். இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அளவில் விவசாயிகள் இழப்பீடு பெற்றுக் கொடுத்துள்ளோம். அதிமுக ஆட்சியில் 16,000 பேருந்து வாங்கப்பட்டது. அதனால் தற்போது பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கிறத. தற்போது பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக ஓட்டுனர்களே சொல்லிவருகின்றனர். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் இலட்சக்கணக்கான மூட்டை நெல் நாசம் அடைகிறது” என்று திமுக அரசை வசை பாடி பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

Spread the love

Related Posts

மத அரசியலை மேடையில் போல்டாக பேசிய நடிகை சாய் பல்லவி | குவியும் பாராட்டுகள் … என்ன பேசினார் ?

மதத்தின் பெயரால் யாருடைய உயிரும் போகக் கூடாது என்ற கருத்தை முன்னிறுத்தி சாய்பல்லவி அவர்கள் பேசியிருப்பது

“எடப்பாடிக்கும் அதிமுகவுக்கும் சுயமாக யோசிக்கும் அளவிற்கு புத்தி இல்லை…” | கடுமையாக தாக்கிய செந்தில் பாலாஜி

கோவையில் உள்ள நவ இந்தியா பகுதியிலுள்ள ஒரு தனியார் விடுதியில் திமுக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட

செருப்பு அணிந்து வளாகத்துக்குள் வந்ததால் நயன் விக்கி மீது கடுப்பில் இருக்கும் தேவஸ்தானம் | சமாதானம் படுத்துமா விக்கியின் மன்னிப்பு கடிதம் ?

திருப்பதி கோயிலில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி செருப்பு அணிந்து வந்தார்கள் என்று தேவஸ்தானத்தில் இருந்து