சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஊர்வசி ரூட்டால எனக்காக ரிஷப் மணி கணக்கில் காத்திருந்தார் என புதிய குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.
கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் நட்சத்திரங்களும் அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்குவது வாடிக்கையான ஒன்று சில நேரம் அது உண்மையாகவே திருமணமும் ஆகியதுண்டு, அதற்கு எடுத்துக்காட்டு யுவராஜ் சிங் மற்றும் விராட் கோலி தான். இந்த வரிசையில் தற்போது ரிஷப் பந்த சிக்கி உள்ளார். ஆனால் இது காதல் கிசுகிசு போல தெரியவில்லை ஆனால் சோசியல் மீடியா சண்டை போல இருக்கிறது.
2018 ஆம் ஆண்டு ஊர்வசிக்கும் பண்டுக்கும் காதல் என இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் இவர்கள் அடிக்கடி வெளியே டேட்டிங் செல்வது ஒன்றாக இருப்பது என அதை நிரூபித்தும் காட்டினர். மேலும் ஊர்வசியின் whatsapp நம்பரை பிளாக் செய்து விட்டதாகவும் செய்திகள் வந்தது. தற்போது ஊர்வசி ஒரு நேர்காணலில் மீண்டும் அதை கிளறி இருக்கிறார். அதாவது அந்த இன்டர்வியூவில் பேசிய அவர் எனக்காக ஒருவர் ஓட்டலில் மணி கணக்கில் காத்திருக்கிறார் என்றார். மேலும் யார் என்று பெயர் குறிப்பிடாத ஊர்வசி RP என குறிப்பிட்டு சொன்னார்.

RP என்றால் ரிஷப் பண்டே தான் சுருக்கமாக RP என்கிறார் என பலரும் இது தொடர்பாக கருத்து கூறி வருகின்றனர். மேலும் இது இணையத்தில் வேகமாக பரவியது. இந்த நிலையில் எது ரிஷப் கண்ணுக்கு தெரிந்ததால் அவர் உடனே இதற்கு ரியாக் செய்தார். “தலைப்புச் செய்திகளில் வர வேண்டும் என்று அற்ப புகழுக்காகவும் சிலர் நேர்காணல்களில் பொய்களை அள்ளி வீசுகின்றனர். புகழ் தாகத்துக்காக சிலர் இப்படியும் இருப்பார்களா என உண்மையில் வருத்தமாக தான் இருக்கிறது. அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் எனக் கூறி மேலும் என்னை தனியாக விடுங்கள் சகோதரியே எனவும் பொய்க்கும் ஒரு அளவு உண்டு என்றும் பதிவிட்டுள்ளார்.
