இரவின் நிழல் படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனம் அளித்ததால் பார்த்திபனின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மரானுக்கு உருவ பொம்மையை உருவாக்கி செருப்பு மாலை அணிவித்தனர்.
இரவின் நிழல் வெளியாகும் முன்பிலிருந்து ப்ளூ சட்டை மாறனுக்கும் பார்த்திபனுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. திரு பார்த்திபன் அவர்கள் இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் என விளம்பரம் செய்தார். ஆனால் அதில் உடன்பாடு இல்லாத ப்ளூ சட்டை மாறன் பல நெகட்டிவ் விமர்சனங்களை படத்துக்கு எதிராக அளித்திருந்தார்.

அதாவது இந்த படம் உண்மையிலேயே உலகத்தில் முதல் படம் கிடையாது. ஏற்கனவே இப்படி ஒரு படம் வந்துவிட்டது. அதனால் உலகின் முதல் படம் என்னும் டைட்டில் போடுவதை நிறுத்தி விடுங்கள் என கூறியிருந்தார். இதற்கு பார்த்திபன் அவர்களும் அதெல்லாம் கிடையாது google நான் தேடிப் பார்த்தேன் உண்மையிலேயே நான் எடுத்த படம் தான் உலகில் முதல் நான் லீனியர் படம் என கூறியிருக்கிறார். இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் பெரிதாகி அவரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிப்பதுவரை சென்றிருக்கிறது.
தற்போது அந்த போட்டோவை மாறன் அவர்களே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அவர் போட்ட அந்த டீவீட்டில் :- “மாறனுக்கு செருப்பு மாலை போட்டு தரமான செருப்படி சம்பவம் செய்து பார்த்திபன் ரசிகர்கள். புதுமையான பார்ட்டிக்கு நன்றி பார்த்திபன் சார் உங்கள் நாகரீக செயல் தொடரட்டும்” என பார்த்திபனை கலாய்க்கும் வகையில் அந்த வீட்டை அவர் போட்டு இருக்கிறார்.

மேலும் பலரும் பிளிஸ்த்தை மாறனுக்கு இதெல்லாம் தேவை எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து இரவின் நிழல் படம் வருவதற்கு முன்பு 2012ல் அகாடம் என்னும் ஒரு படம் கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை படைத்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை கிடைக்கும் போது இரவின் நிழல் படத்திற்கு ஏன் கிடைக்கவில்லை ? ஏனென்றால் அது உலகிலேயே முதல் படம் கிடையாது. அதனால்தான் உங்களுக்கு அவார்ட் கொடுக்கவில்லை என கலாய்த்தார். அப்படியாக பல கேள்விகளை பார்த்திபன் முன் அடுக்கி இருந்தார். தற்போது இந்த மோதல் போக்கு எங்கு போய் முடிய போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.