ஆஸ்திரேலியா அணி ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் என விளையாடி வருகிறது. இதில் அனைத்தும் நடந்து முடிந்து தற்போது ஒரு டெஸ்ட் மட்டும் மீதம் உள்ளது. அந்த ஒரு டெஸ்ட் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஸ்ரீலங்காவில் இருக்கும் ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்ரீலங்காவை சுற்றி பார்க்க செல்லும்போது அங்கு குரங்குகள் மற்றும் பாம்புகளுடன் விளையாடி இருக்கின்றனர். அந்த போட்டோக்களை ஸ்டீவன் ஸ்மித் மற்றும் பேட் கமெண்ட்ஸ் ஆகியோர் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கமின்ஸ் ஒரு பெரிய மலைப் பாம்புடன் விளையாடும் ஒரு வீடியோவை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பாம்பு பிடி கலைஞரிடம் இருந்து அந்த பாம்பை லாவகமாக தன் கைக்கு மாற்றி அதை தோளில் சுற்றிக்கொண்டு அந்த பாம்புடன் விளையாடுகிறார்.


பின்பு அந்த பாம்பின் பெயரைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுடன் பலரும் இதை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆஸ்திரேலியா ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளை கைப்பற்றி இருந்தாலும். ஒருநாள் போட்டிகளில் தோற்றிருக்கிறது. அதனால் வருகிற டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்று முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்கும்.
I've never seen snakes or monkeys at Bondi 😉 #Galle pic.twitter.com/XYOAQaALoA
— Pat Cummins (@patcummins30) July 6, 2022