“நான் பாவனி கண்ட்ரோல்க்கு வந்துட்டேன்” | மேடையில் ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த அமீர்

பவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி போன்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை 3 மாதத்தில் முடிவடைந்தது. பவானியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்,

அதற்குப்பிறகு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவானி அங்கு அமீருடன் சற்று நெருக்கம் காட்டி பழக ஆரம்பித்தார். அப்போது ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதல் செய்கின்றனர் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என சர்ச்சையைக் கிளப்பி விட்டனர். அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றி அதை உறுதி செய்யும் விதமாக நடந்து கொள்கின்றனர்.

“இந்த சமூகம் என்ன வாழவிடலா, எனக்கும் சாகனும் போல இருந்துச்சு” கதறிய மீரா மிதுன்

இவர்களின் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. தற்போது பிக் பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக இணைந்து நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் விக்ரம் பட சிறப்பு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் முன்னதாக கமலஹாசன் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது மன்மதன் அம்பு படத்தில் வரும் நீலவானம் பாடலுக்கு அமீர் பவனி ஜோடி நடனமாடியது. அப்போது அவர்கள் நடனம் ஆடிய போது அவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. அதனை ரம்யா கிருஷ்ணனும் சிறப்பு விருந்தினரான கமலும் வெகுவாக பாராட்டினார்கள்.

இதற்கு பதிலளித்த அமீர் இந்தப் பாடலுக்கான ரிகர்சலின் போது முதல் மூன்று நாட்கள் நான்தான் பவானியை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தேன். ஆனால் அடுத்த மூன்று நாட்கள் நடன இயக்குனரான எண்ணையை அவள் கன்ட்ரோல் செய்து விட்டார் என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த எல்லோரும் இந்த ஜோடியை பாராட்டி பேசினர்.

Spread the love

Related Posts

புது பட ரிவியூ | தனுஷின் மாறன் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், மாளவிகா மோகனன், ஆடுகளம் நரேன் போன்றவர்கள்

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் – சம்பவம் செய்த அமித்ஷா

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது

பாஜக எம்.பி மீது ஒலிம்பிக் வீராங்கனைகள் பாலியல் புகார் … சிக்குவாரா அந்த பாஜக முக்கிய புள்ளி ?

பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த ஒலிம்பிக் வீராங்கனைகள் தேசிய பயிற்சியாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பகிரங்கமாக

Latest News

Big Stories