நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது மோசமான ஒரு பி.சி.ஓ.எஸ் என்ற ஹோர்மோன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இது குறித்து வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி அடைய செய்துதுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் மூத்த மகள் இவர். தற்போது புகைப்பட கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து அவருடன் இருவர்களும் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவும். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பியுள்ளார். அதாவது அவருக்கு பி சி ஒ எஸ் என்ற ஹோர்மோன் பிரச்சனை இருப்பதாகவும் அதை நான் எதிர்கொண்டு வருவதாகவும் ஒரு வீடியோவில் பேசி உள்ளார். அதில் பேசிய அவர் எனது உடல்நிலை தற்போது சரியாக இல்லை பி சி ஓ எஸ் என்ற எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றால் ஹார்மோன் பிரச்சனைகளை நான் எதிர் கொண்டு வருகிறேன். அதனால் எனக்கு மாதவிடாய் சீராக இல்லை. மேலும் இது குறித்து பல பாதிப்புகள் எனக்கு இருக்கிறது. இதை பெண்கள் அறிவார்கள் என கூறியுள்ளார்.
எனவே இது போன்ற சூழ்நிலைகளில் நான் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் நல்ல தூக்கத்தையும் என் உடலுக்கு தர வேண்டும் அதை நான் ஒரு போராட்டமாக பார்க்காமல் என் உடல் அதன் சிறந்ததை செய்யும் ஒரு இயல்பான இயக்கமாக அதை ஏற்றுக் கொள்கிறேன். இது எனக்கு ஒரு சவாலான பயணம் ஆனாலும் எதற்கு இது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

பெரும்பாலான பெண்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் இந்த பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி என்ற பிரச்சனை இருக்கிறது. அவர்களுக்கு ஆரோக்கியமான மாதவிடாய் இருக்காது. பெண்களின் ஆரோக்கியத்திற்கும் மனமகிழ்ச்சிக்கும் ஒரு முக்கிய காரணமா மேலும் இது கருத்தரிப்பிலும் சிக்கல் ஏற்படுத்தும் உடலை எடையை அதிகரிக்கும். மேலும் மன அழுத்தம் பதற்றம் இல்லாத ஒரு வாழ்வினை நாம் கடைபிடித்தால் இந்த வகையான ஹார்மோன் பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம். மேலும் பெண்கள் ஐஸ்கிரீம், பழச்சாறுகள், சோடா, பேக்கரி பண்டங்கள், நெய் மற்றும் பாஸ்ட் புட் போன்ற அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.