இந்த ராசி காரர்களுக்கு கண்களில் பிரச்னை ஏற்படும், அதை எப்படி போக்குவது தெரியுமா ?

ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகளை வைத்து கண்களில் கோளாறு னாய் போன்றவற்றை கணிக்க வேண்டும். 2ம் வீடு வலது கண்ணையும், 12ம் வீடு இடது கண்ணையும் குறிக்கும். கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றை வைத்து கண் நோய் மற்றும் கோளாறு ஆகியவற்றை பார்க்க வேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்துல 2ம் வீட்டுக்கதிபதி 6,8,12 ல் மறந்து காணப்பட்டாலோ, பகை, நீசம் பெற்று காணப்பட்டாலோ கண்களில் குறைகளோ, நோய்களோ ஏற்பட்டபடி இருக்கும் அதுமட்டுமில்லாமல் காசு பரிகாரங்கள், 6,8,12 ம் வீட்டுக்கதிபதிகள் 2ம் வீட்டில் இருந்தால் கண்களில் கோளாறு, குறைகள் இருக்கும்

ஜாதகத்தில் சூரியன் பகை நீசம் பெற்று அம்சத்திலோ, ராசியிலோ காணப்பட்டால் கண் கோளாறு ஏற்படும், அதே போல் சூரியன் சுக்கிரன் இணைந்து கேட்டு பாவீனம் அடைந்து காணப்பட்டால் கண் கோளாறு, கண்களில் புரை போன்றவை ஏற்பாடு, அதே போல் சூரியன் சந்திரன் இணைத்து 6.8.12ல் இருந்தால், கண் கோளாறு, மாறுகண் போன்றவை ஏற்படும்

கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு அடிப்படையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் என்றாலே நாம் வைட்டமின் ஏ என்று சொல்லி விடுவோம். ஆனால் வெறும் வைட்டமின் ஏ மட்டும் போதுமானது அல்ல. வேறு சில வைட்டமின்களும் கண்களின் ஆரோக்கியத்துக்கு மிக அவசியம். அந்த வைட்டமின்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வைட்டமின்கள் நம்முடைய உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்துக்களில் ஒன்று. அவை ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு வித செயல்பாடுகளுக்கும் உதவி செய்கின்றன. அப்படி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு வைட்டமின் ஏ தவிர கீழ்வரும் ஊட்டச்சத்துக்களும் தேவை

X வடிவ ரேகை உங்கள் கையில் இருக்கிறதா, இதை செய்தால் கோடீஸ்வரர் நீங்கள்தான்

வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவைப்படுகிற அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், சிவப்பு மிளகாய், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகளில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஆல்பா டோக்கோப்ரில் என்னும் மூலக்கூறு அமைப்பை கொண்டது வைட்டமின் ஈ. இது ஒருவகையான ஆற்றல் மிகுந்த ஆன்டி ஆக்சிடண்ட் ஆகும். இந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ப்ரீ – ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி கண்களின் புரத அமைப்பை பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது.

பாதாம், சூரியகாந்தி விதை, வேர்க்கடலை, சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன்ஸ் உள்ளிட்ட வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

கண்களின் ஆரோக்கியத்தில் வைட்டமின் சிக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. இது புறஊதா கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகின்ற பாதிப்புகளை சரிசெய்ய தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும்.

வைட்டமின் சி உடலில் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் சேதத்தைக் குறைக்கிறது. இந்த ஆக்சடேட்டிவ் சேதம் குறிப்பாக வயதாகும்போது உண்டாகும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தீர்க்க உதவுகிறது. இந்த பிரச்சினையைத் தவிர்க்க ஆரஞ்சு பழங்கள், ப்ரக்கோலி, பிளாக் பெர்ரீஸ், கிரேப் ஃபுரூட் உள்ளிட்ட வைட்டமின் சி நிறைந்த பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கண்களின் ஆரோக்கியத்துக்கு பி வகை வைட்டமின்கள் மிக மிக அவசியம். குறிப்பாக வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும் உடலில் ரத்த ஓட்டம் மெதுவாகி ரத்த சோகை உள்ளிட்ட பிரச்சினைகளை உண்டாக்கும். இதனால் கண்களிலும் ரத்த ஓட்ட குறைபாடு ஏற்படும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க வைட்டமின் பி12 மிக அவசியம்.

நியாசின் என்னும் வைட்டமின் பி3 உள்ளிட்ட பல்வேறு வகையான பி வைட்டமின்கள் குளுக்கோமா உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்த்து கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்யும். அதனால் தினசரி உணவில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி9, பி12 ஆகிய பி வகை வைட்டமின்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியம்.

லூடின் என்பது கரோட்டீனாய்டுகள். இந்த கரோட்டினாய்டுகள் இலைவடிவ காய்கறிகளில் மிக அதிள அளவில் இருக்கின்றன. இவை நம்முடைய கண்திரைகளையும் ரெட்னாவையும் பாதுகாக்கும்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 மில்லிகிராம் அளவுக்கு லூடின் தேவை. இந்த லூடின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்த லூடின் உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்களில் ஏற்படும் குளுக்கோமா உள்ளிட்ட கண் நோய்களைத் தீர்க்க உதவி செய்யும்.

முட்டையின் மஞ்சள் கரு,
மக்காச்சோளம்,
ப்ரக்கோலி,
லெட்யூஸ்,
பட்டாணி,
ஸ்பின்னாச்
உள்ளிட்டவற்றில் லூடின் சத்து அதிக அளவில் நிறைந்திருக்கிறது.

ஜிங்க் நம்முடைய கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கத் தேவைப்படும் மிக முக்கியமான மினரல்களில் ஒன்றாகும். கண்களில் உள்ள ரெட்டினா, நரம்பு செல்கள் மற்றும் கண்களின் புரத அமைப்பு ஆகியவற்றைின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன

அதேபோல ஜிங்க் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அது உடலில் உள்ள போதிய அளவு வைட்டமின் ஏ ஊட்டச்சத்தை ரெட்டினாவுக்கு வழங்குவதோடு மெலனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த மெலனின் நம்முடைய கண்களை புறஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்கு 40 – 80 மில்லிகிராம் அளவுக்கு ஜிங்க் தேவைப்படுகிறது. அதனல் தினசரி உணவில் பீன்ஸ், கொண்டைக்கடலை, நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், பூசணிக்காய் விதை, பால் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, கண்களின் ஆரோக்கியத்துக்கும் அவசியமானது. இந்த கொழுப்பு அமிலங்கள் நம்முடைய கண்களில் உள்ள ரெட்டினா சேதமடையாமல் பாதுகாக்கும்.

கண்களில் புரை ஏற்படுவது போன்றவற்றைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் சில இதோ…

மத்தி, சால்மன், டூனா உள்ளிட்ட மீன் வகைகள்,
ஆளி விதை,
வால்நட் ,
சியா விதை,
ஆலிவ் ஆயில்,
அவகேடோ,

போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம். இவற்றை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண் பார்வை மேம்படும்.

Spread the love

Related Posts

ஜீவசமாதிஅடைந்த நித்யானந்தா? வெளியான பரபரப்பு ரிப்போர்ட்

கைலாச அதிபர் நித்யானந்தா கடந்த மே மாதம் முதல் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தார் அவரது

“கூட்டணியாக இருப்பதால் பொறுமையாக இருக்கிறோம், மோடிக்கு முட்டு கொடுத்தா திமுக தூக்கி எறியப்படும்….” – VCK இளைஞரணி தலைவர் சங்கத்தமிழன்

கூட்டணியில் இருப்பதால் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு இருக்கிறோம் மோடிக்கு முட்டுக் கொடுக்கும் வேலையை செய்யாதீர்கள் என

இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதால் பர்கானா படம் ரத்தா ?? | தயாரிப்பாளர் என்ன கூறுகிறார் ?

பர்கானா திரைப்படம் திரையரங்குகளில் இருந்து நீக்கப்படவில்லை என படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு விளக்கம்

Latest News

Big Stories