முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்களின் கருணை மனு அப்போதிலிருந்தே நிலுவையில் உள்ளது. கருணை மனுவை இந்த மாதிரி நிலுவையில் வைத்திருப்பது அநீதியான ஒரு செயலாகும். அதனால் 2016இல் பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார். அதன்பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்திருந்தார்.

தற்போது நீதிபதிகளின் அமர்வுக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது :- “பேரறிவாளன் ஏற்கனவே சிறையில் முப்பது வருடம் இருந்துவிட்டார். அவர் அங்கேயே படித்தும் விட்டார். உங்களின் தயவு இல்லாமல் நாங்களே ஏன் அவரை விடுதலை செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசையும், மாநில அரசையும் கேட்டது. இதனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், போபண்ணா ஆகியோர் தலைமையில் இன்று தீர்ப்பு வழங்கி பேரறிவாளனை விடுதலை செய்வதாக அறிவித்தனர்.
உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 142 ஆவது பிரிவு செயல்படுத்தி பேரறிவாளனுக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்பு வழங்குவது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும்.
