மாலத்தீவில் அமைச்சர் ஒருவரை கத்தியால் குத்திய நபரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மாலத்தீவின் தலைநகரமான மாலே தெருவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அலி சோழி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து தனது கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு அவரை தாக்க முயற்சித்திருக்கிறார். மேலும் அவர் அவருடைய கழுத்திலேயே குறி வைக்கிறார் என்பது வீடியோ பார்க்கும் போது அப்பட்டமாக தெரிகிறது. அவரும் அதை சுதாரித்து கொண்டு வண்டியை கீழே போட்டுவிட்டு அந்த தாக்குதலில் இருந்து தம்பி ஓடினார். அவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

அமைச்சருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் கூட மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் தாக்கப்பட்டார். நஷீத் கார் நிற்கவைக்கப்பட்டு இருந்த இடத்தின் பக்கத்தில் ஒரு ஸ்கூட்டரில் பாம் வைத்து அந்த தாக்குதலை நடத்தினர். இதில் காயமடைந்த அவருக்கு விமானம் மூலம் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே மாலத்தீவின் பயங்கரவாதிகள் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும் அரசு கையில் எடுத்து வருகிறது மேலும் இது போன்ற பயங்கர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாத வண்ணம் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த தாக்குதல் நடத்திய நபர் அவரை தாக்குவதற்கு முன்பு குர்ஆனில் உள்ள சில வாசகங்களை கூறிவிட்டு தாக்கியது குறிப்பிடத்தக்கது.
#Maldives Minister #Ali_Solih stabbed near Male, reported that the perpetrator recited some verses of the #Quran before attack on Solih’s neck. pic.twitter.com/APgn1geXld
— Sandeep Panwar (@tweet_sandeep) August 23, 2022