எம்மோவ் ….. அமேசானில் ஒரு குளியல் வாலியின் விலை 26 ஆயிரம்… | இதற்கு பின் இருக்கும் காரணம் என்ன ?

அமேசானில் ஒரு குளியல் வாலியின் விலை 26 ஆயிரம் விலை என போடப்பட்டிருந்த சம்பவம் இணையதளத்தில் பகீர் கிளப்பியுள்ளது.

பொதுவாக இணைய தளத்தில் நாம் எது தேடினாலும் அது கிடைக்கும் சாணி வரட்டியிலிருந்து, வெரைட்டியான ஐபோன் வரை எல்லா விதமான பொருட்களும் ஆன்லைனில் கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு ஆன்லைனில் ஒரு வாலியின் விலை 26 ஆயிரம் என விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

டுவிட்டரில் விவேக் ராஜ் என்பவர் இந்த ஸ்கிரீன் சாட்டை பதிவிட்டு இருக்கிறார். அந்த ஸ்கிரீன் ஷாட்டில் நாம் சாதாரணமாக குளிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் பக்கெடின் விலை 20 ஆயிரம் என போடப்பட்டுள்ளது. அதே போல் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மக் விலை கூட 10,000 வரை விற்கின்றனர் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 12 ஆயிரம் இருக்கும் பொருளை நாங்கள் பத்தாயிரத்துக்கு தருகிறோம் என போடப்பட்டிருப்பது தான்.

இப்படிப்பட்ட வேடிக்கையான விஷயங்களை அமேசான் நிறுவனம் எப்படி செய்கிறது என அனைவருக்கும் கேள்வி இருக்கும். ஆனால் உண்மையிலேயே இதற்கும் அமேசான் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. வாடிக்கையாளர்களுக்கும் அதை விற்பவர்களுக்கும் ஒரு மீடியமாக தான் இந்த ஆன்லைன் செயலிகள் செயல்படுகின்றன. அப்போது தவறுதலாக அந்த பொருளை விற்பவர்கள் இப்படிப்பட்ட விலையை இணையத்தில் பதி விடுவார்கள். அதனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் இம்மாதிரியான பிழைகள் ஏற்படலாம். வரும் காலங்களில் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் எந்தெந்த பொருள்களுக்கு எவ்வளவு விலை வைத்து விற்க வேண்டும் என்ற நிர்ணயம் வைத்தால் இம்மாதிரியான பிழைகள் கொஞ்சம் குறைக்கப்படும்.

Spread the love

Related Posts

டி20 உலக கோப்பைக்கு களம் இறங்கும் இந்திய அணி வெளியானது | யார் யார் டீமில் உள்ளனர் ?

இந்தியாவின் டி20 உலக கோப்பைக்கு களம் இறங்கும் இந்திய அணியின் அதிகாரபூர்வ பட்டியல் வெளியானது சென்ற

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு கொண்டு புடவையில் கவர்ச்சி விருந்தளித்த சாக்க்ஷி அகர்வால்

பிக்பாஸ் மூலம் பிரபலமாகி அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி

Viral Video | ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மனைவியை பணி செய்யவிடாமல் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் திமுக பிரமுகரான கணவர்

விரலி மலையில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மனைவிக்கு பதிலாக முக்கிய கோப்புகளில் கணவர் கையெழுத்திடும்