ஐபிஎல் 15வது சீசன் வருகிற 27-ஆம் தேதி கோலாகலமாக மும்பையில் துவங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்பு இல்லாத வகையில் 2 புதிய அணிகள் இந்த ஐபிஎல் இடம் பெறுவதால் இந்த ஐபிஎல் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என்று சொல்லலாம்.
ஐபிஎல் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது அதற்காக எல்லா அணிகளும் இப்போதிலிருந்தே தீவிரமாக பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஐபிஎல் தொடங்க உள்ள இந்த நேரத்தில் சில சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடப்பதால், அந்த தொடர்களிலும் சில வீரர்களை ஐபிஎல் முதல் வாரத்தில் ஆட வாய்ப்பில்லை என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது.
பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடப்பதால் பின்ச், சும்மின்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் ஒரு வார காலம் அதில் இடம் பெற மாட்டார்கள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி வீரரான க்ளென் மேக்ஸ்வெல்க்கு கல்யாணம் நடக்க உள்ளதால் அவரும் வரமாட்டார். மிட்செல் மார்ஷ், வார்னர், பேட் சும்மின்ஸ் போன்ற வீரர்கள் பாக்கிஸ்தான்னுடன் ஆடும் ஒரு நாள் மற்றும் t20 போட்டியில் இல்லை என்றாலும். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் கட்டளை படி ஆஸ்திரேலியா அணி சர்வதேச போட்டிகள் ஆடும்போது அந்தந்த ஆஸ்திரேலியா வீரர்கள் பெயர் அந்த தொடரில் சேர்க்கப்படவில்லை என்றாலும் வேறு ஒரு லீக் போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது, இதனால் ஆஸ்திரேலியாவின் சில முக்கிய வீரர்கள் பாகிஸ்தானுடன் ஆடவில்லை என்றாலும் ஒரு வாரம் கழித்தே ஐபிஎல் ஆட வருவார்கள்.
பெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து இடையே ஆன தொடரில் ஆடிவரும் கைல் மேயர், அல்சாரி ஜோசப், ஆகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் அதோடு இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ ஆட வாய்ப்பில்லை.
ஐபிஎல் 15வது சீசனில் முதல் வாதத்தில் ஆட வாய்ப்பில்லாதவர்கள் :-
பாட் கம்மின்ஸ் (கே.கே.ஆர்)
ஆரோன் ஃபின்ச் (கே.கே.ஆர்)
டேவிட் வார்னர் (டெல்லி கேபிட்டல்ஸ்)
மிச்சேல் மார்ஷ் (டெல்லி கேபிட்டல்ஸ்)
க்ளென் மேக்ஸ்வெல் (ஆர்.சி.பி)
ஜோஷ் ஹேசில்வுட் (ஆர்.சி.பி)
மார்கஸ் ஸ்டோய்னிஸ் (லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்)
கைல் மேயர்ஸ் (லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்)
அல்ஸாரி ஜோசஃப் (குஜராத் டைட்டன்ஸ்)
ஜானி பேர்ஸ்டோ (பஞ்சாப் கிங்ஸ்)
ஜேசன் ராய் மார்க் உட் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் அவர்களின் சொந்த காரணத்திற்காக ஐபிஎல் இல் இருந்து முழுவதுமாக விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது