நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு அமேசான் பிரைம் OTT யில் வெளியான திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சாதியை (வன்னியர்களை) தாக்கியதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என பாமக தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். அதன் பெயரில் அந்த படம் வெளியான அன்று பல சர்ச்சைகளை சந்தித்தது. இதனால் சூரியாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடும் அளவிற்கு அந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
அதன் பிறகு அந்தப் பிரச்சனை சற்று தணிந்தது என்று நினைக்கும் போது தான், இப்போது மீண்டும் வெடித்துள்ளது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் வெளியாவதை அடுத்து இந்தப் படத்தை கடலூரில் தடை செய்யவேண்டும் திரையரங்குகள் இந்த திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று பாமக சார்பில் அறிக்கை விடபட்டு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சூரியா வன்னியர் மக்களிடம் எப்போது பொது மன்னிப்பு கேட்கிறாரோ. அப்போதுதான் அவர் படத்தை நாங்கள் திரையிட அனுமதிப்போம். அதுவரை சூர்யா படங்கள் எது வந்தாலும் அதை திரையிடக்கூடாது என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர் பாமகவினர்.`
