நடிகை மும்தாஜ் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் மும்தாஜ் மீது போலீஸாரிடம் புகார் கொடுத்த சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்தாஜ் தமிழ் சினிமாவில் மோனிஷா என் மோனாலிசா படம் மூலம் அறிமுகமானார். பின்னர் சில பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி பல ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். முக்கியமாக கட்டிபுடிட கட்டிபுடிடா பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலமடைந்தார். அதிலிருந்து மும்தாஜ்க்கு ஒரு நல்ல பெயர் தமிழ் சினிமாவில் உள்ளது.

தற்போது அண்ணா நகரில் வசித்து வரும் மும்தாஜின் வீட்டில் முஜிதின் என்ற ஒரு வடமாநில பெண் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு ஒரு தங்கையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக அங்கிருப்பவர்களை அழைத்து போலீசாருக்கு கால் செய்து என்னை காப்பாற்றுங்கள் என கதறி இருக்கிறார். அதனால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு இதுதொடர்பாக தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் அண்ணா நகரில் இருக்கும் மும்தாஜின் வீட்டிற்கு விரைந்த போலீசார் அங்கு அந்த பணிப்பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் “நான் வட மாநிலத்தை சேர்ந்தவர் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த வேலை செய்கிறேன் தற்போது சில தினங்களாக இவர் எங்களுக்கு அதிக வேலை கொடுக்கிறார், மேலும் டிவியும் பார்க்க விடுவதில்லை எங்களை கொடுமை செய்கிறார், அதனால் எங்களை எங்கள் பெற்றோர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக தங்கையிடம் கேட்டபோது எனக்கு இங்கு இருக்கவே பிடித்திருக்கிறது அதனால் நான் இங்கேயே இருக்கிறேன் என கூற அந்த அக்காவை மட்டும் அவர்களின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு சென்னைக்கு வந்து பெண்ணை அழைத்து செல்லுமாறு கூறியிருக்கின்றனர். இதுதொடர்பாக மும்தாஜிடம் விசாரித்தபோது அவர்கள் இருவரும் ஆறு வருடங்கள் சந்தோஷமாக தான் இருந்தார்கள். தற்போது அக்கா தங்கை சண்டை ஏற்பட்டு இவர்களுக்குள் சிறு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறதே தவிர வேறு எதுவும் பெரிய காரணங்கள் இல்லை என கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் அங்கு இருக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
