இலங்கையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மகிந்த ராஜபக்ஷவிடம் அந்த நாட்டு போலிசார் விசாரணையை நடத்தியுள்ளனர்.
கடந்த மே 9-ஆம் தேதி இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் திடீரென்று சில வன்முறையாளர்கள் அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்து மக்களை அடித்து விரட்டினர். இந்த வன்முறைக்கு இலங்கையின் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச காரணமாக இருப்பார் என்று அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
அந்த கலவரத்தில் இலங்கையை கலவர பூமியானது. இந்நிலையில் அந்த போராட்டம் தொடர்பாக அந்த நாட்டு சிஐடி போலீசார் தற்போது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை விசாரித்துள்ளார். கொழும்புவில் உள்ள அவரது இல்லத்தில் இந்த விசாரணையை அவர் தொடங்கினார்.

இந்த போராட்டத்தில் அமைதியாக போராட்டக்காரர்கள் தங்களுடைய போராட்டத்தை நடத்தி வரும் போது திடீரென்று எப்படி வன்முறை ஏற்பட்டது ? யாரால் இது ஏற்பட்டது என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் இந்த விசாரணையில் அவரது மகன் நமல் ராஜபக்ஷவிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
