கடந்த 3ஆம் தேதி நந்தம் பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஒரு ஆட்டோ காவல் ஆய்வாளரை மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பொன்ராஜ்யை ஏடிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார்.

கடந்த 3ம் தேதி ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது ஆட்டோ ஒன்று அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்தது அவர்களைத் தடுக்க முயன்றபோது அந்த ஆட்டோ டிரைவர் போலீஸ் தடுக்க வருவதையும் பொருட்படுத்தாமல் அவரை முட்டி விட்டு முன்னேறி சென்றது இதனை கண்ட அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோவின் CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மீது ஆட்டோ ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்ற பரபரப்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.
— DON Updates (@DonUpdates_in) April 5, 2022
ஆட்டோ ஓட்டுனரை தேடி வருகிறது காவல்துறை. pic.twitter.com/3iVCDaGHd3
இந்தநிலையில் படுகாயமடைந்த பொன்ராஜ் தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வீடு திரும்பினார். அதன் பிறகு இன்று அவரை நேரில் சந்தித்து தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் காவல்துறை செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை பேசி வந்துள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு
