கோவையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்விக்கி டெலிவரி பாயை கன்னத்தில் அறைந்தற்காக காவலர் சதீஷை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அவர் சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார் அது மீண்டும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது அதில் ஒரு கூறியது என்னவென்றால் :- “எனது பெயர் சதீஷ் நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு டெலிவரி பாயை கன்னத்தில் அறைந்தேன். அந்த வீடியோ வைரல் ஆனது அதற்குப் பிறகு நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். பீலமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது நான் வீட்டில் இருந்து வருகிறேன். முதல் நாள் பணி முடிந்து இரவு 1 மணிக்கு வீட்டிற்கு சென்றேன்.
“இந்துக்களை அவமதிக்கும் நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள்” – மதுரை ஆதினம் பரபரப்பு பேச்சு

மறுநாள் காலை 4 மணிக்கு எழுந்து ஆஜராகி தொடர்ந்து தெலுங்கானா கவர்னர் மற்றும் செகரெட்டரி காவலுக்காக சென்றேன். அவிநாசி சாலையில் பணியமர்த்தப்பட்டு பணியில் இருந்து வந்தேன். கோவை அவினாசி சாலை மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. அந்த நேரத்தில் நான் மிகவும் கடுமையாக பணியாற்றி வந்தேன். ஆனால் பணியின்போது போக்குவரத்தை மிகவும் கடுமையாக சீர் செய்து கொண்டிருந்த போது ஒரு பள்ளி வாகனத்தை மூன்று நபர்களை மறித்து போக்குவரத்து நெரிசலை உண்டாக்கினார்.
நான் அங்கு சென்று விசாரித்தபோது அந்த பள்ளி வாகனம் அவர்கள் இடித்ததாக கூறினார்கள். அவர்களை அந்த பள்ளி வாகனம் இடித்ததாக தெரியவில்லை. அது சம்பந்தமாக வழக்கு ஏதும் இதுவரை பதியப்படவில்லை. நடுவழியில் போக்குவரத்தை ஏற்படுத்திய ஒரு நபரை நான் ஒரு ஓரமாக அழைத்தபோது அவர் வர மறுத்தார் நான் ஒரு போக்குவரத்து காவலர் காண்வாய் வரும்போது அதை சீர் செய்து அனுப்புவது என்னுடைய கடமை என்று நான் கூறியபோது அவர் அதை மதிக்காமல் உங்களுக்கு காண்வாய் பணி தான் முக்கியமா என்று என்ன சில கெட்ட வார்த்தைகளில் பேசியுள்ளார். அதற்காக அவரை நான் ஓரமாகத் தள்ளி இரண்டு அடி அடித்தேன்.

போக்குவரத்து உடனடியாக சீர்செய்ததால் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அனுப்பி வைத்தேன். ஒருவேளை நான் அவ்வாறு செய்யாமல் இருந்தால் காண்வாய் பணியை சரியாக செய்யாததால் என்னை வேலையை விட்டு தூக்கி இருப்பார்கள். நான் அங்கு செய்தது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது நான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறேன் நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன் இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் என் மீது துறை ரீதியான நடவடிக்கை யும் விசாரணைகள் செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக என்னை சஸ்பெண்ட் செய்திருக்கின்றனர்.
எனவே என்னுடைய காவலர் சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை நான் விடுகிறேன். காவலர்கள் இதுபோன்று நல்ல காரியங்கள் எதுவும் செய்து விடாதீர்கள் அப்படி செய்தால் சக பணியாளர்கள் யாரும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். அதனால் வாங்கிய சம்பளத்துக்கு பணி செய்யுங்கள் உங்களுடைய குடும்பங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உண்மையில் இதில் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். காவலர்களில் கைகள் கட்டப்பட்டு விட்டது. குற்றங்கள் நடைபெறும் போது அந்த காவலர்கள் அதை தட்டி கேட்க மாட்டார்கள். குற்றங்கள் மிகவும் அதிகரித்து கொண்டேதான் செல்லும் எனவே என்னுடைய சக காவலர்களை இனி வரும் காலங்களில் மிகவும் நீங்கள் கவனமாக இருங்கள் இல்லை என்றால் எனக்கு நடந்தது போல் தான் உங்களுக்கும் நடக்கும்” என சர்சையான ஒரு பதிவை அவர் போட்டிருக்கிறார்.