அரசு நடத்தும் நிகழ்ச்சியில் 3-வது வரிசையில் இடம் | உதய்க்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை | புறக்கணிக்க படுகிறாரா மேயர் ப்ரியா ?

தமிழ்நாடு அரசு நடத்தும் நிகழ்ச்சியில் மேயருக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டு வரும் நிலையில் சென்னை மேயரை அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் புறக்கணிப்பதாக புகார் தற்போது எழுந்துள்ளது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி பெறும் அதிகாரத்தை பெற்று இருக்கும் திமுக உள்ளாட்சி தேர்தலில் 95 விழுக்காடு இடங்களை கைப்பற்றியது.

சென்னை மாநகராட்சிக்கு ஆளுமை மிக்க ஒரு மேயர் பதவிக்கு யாரையாவது கொண்டு வர வேண்டும் என எண்ணி சென்னை மாநகராட்சிக்கு முதல் பெண் மேயர் என அறிவிக்கப்பட்டு பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு துணை மேயராக திமுகவின் மூத்த நிர்வாகி மகேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பல்வேறு ஆலோசனைகளை மேயர் பிரியாவிற்கு வழங்கினார்கள், இந்த நிலை திமுகவுடைய அரசு நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா கலந்து கொள்வார். ஸ்டாலினின் பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் காலதாமதமாக வந்ததால் மேடையில் ஒரு ஓரமாக அமர வைக்கப்பட்டார் மேயர் பிரியா.

இதற்கு முன்பு புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்து கொண்டு அந்த நிகழ்வை சிறப்பித்தனர். அப்போது தமிழக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அந்த உறுப்பினர்களோடு மூணாவது வரிசையில் அமர்ந்திருந்தார் மேயர் பிரியா, மற்றும் இரண்டாவது வரிசையில் துணை மேயர் மகேஷ் குமார் இருந்திருந்தார்.

தற்போது இது சமூக வலைதளங்களில் பரவி சென்னை மேயருக்கு முன்னுரிமை கொடுப்பதில்லையா என புகார் வெளிவந்தது. ஏற்கனவே அமைச்சர் நேரு மேயர் பிரியாவை ஒருமையில் பேசிய வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மேயராக இருக்கும் ஒரு பெண்ணிற்கு நீங்கள் சம உரிமை கொடுக்க மாட்டீர்களா என பல தரப்பு வாதங்கள் இதன் மூலமாக எழுந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்தார். உதயநிதிக்கு கிடைக்கும் முக்கியத்துவம் கூட மேயர் பிரியாவுக்கு கிடைக்கவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox