“இந்தியா இந்துக்களின் நாடு தான்” ஆ ராசாவின் இந்து எதிர்ப்பு பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கும் பிரேமலதா

இந்துக்களைப் பற்றி தவறான முறையில் பேசிய ராசாவை ஓங்கி அடிப்பது போல இந்தியா இந்து நாடு தான் என கூறியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

தி.கா தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் ராசா பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த விழாவில் பேசிய அவர் நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், நீ இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், நீ பாரசீகனாக இல்லாமல் இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இது போன்ற கொடுமை வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அவை இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் ஆகத்தான் இருப்பாய். சூத்திரன் என்றால் விபச்சாரியன் மகன் இந்துவாக இருக்கும் வரை உன்னைப் பஞ்சவன் என்றும். நீ இந்துவாக இருக்கும் வரை நீ தீண்ட தகாதவனாக தான் இருப்பாய் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் ? எத்தனை பேர் தீண்டத்தகாத ஆட்களாக இருக்க விரும்புகிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அடுத்து எப்போ சார் ரெய்டுக்கு வருவீங்கன்னு என்னோட பொண்ணு கேஷுவலாக கேட்டால்” – ரெய்டு குறித்து நையாண்டியாக பதிலளித்த விஜயபாஸ்கர்

மேலும் சனாதானத்தை அடியோடு அழிக்க வேண்டும் என அவர் கூறியிருக்கின்றார். அவரின் இந்த பேச்சை பாஜகவினர் தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பிரேமலதாவும் பதிலடி கொடுத்துள்ளார். தேமுதிக தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுக தலைமை அலுவலகத்தில் பதினெட்டாம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அப்போது அதில் கலந்து கொண்ட பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் ஆ ராசாவின் பேச்சை பற்றி கேட்டனர். அப்போது அதற்கு பதில் அளித்த அவர் ராசா கூறியது ஏற்கும் படி இல்லை இந்தியா என்பது இந்துக்களின் நாடு தான் என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் 2004 நாடாளுமன்ற தேர்தலுக்காக தேமுதிக தயாராகி வருகிறது. யார் கூட்டணி என்பது குறித்து தெரியவில்லை இன்னும் இரண்டு ஆண்டு கால அவகாசம் உள்ளது. கட்சியின் வளர்ச்சி பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருவது உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox