காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படவுள்ள திரையரங்குகள் | முதல் படமே பொன்னியின் செல்வன் தானாம்

ஜம்மு காஷ்மீரில் தற்போது நீண்ட வருடங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 1980களில் ஏராளமான திரையரங்குகள் ஜம்மு காஷ்மீரில் இயங்கி வந்தது. அந்த திரையரங்கெல்லாம் 1990 ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதற்கு காரணம் தீவிரவாதம் தான். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்திருக்கும் 11 தியேட்டர்களும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சின்னாபின்னமானது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர் 1996 ஆம் ஆண்டு பருக் அப்துல்லா தலைமையில் அரசு பொறுப்பேற்ற பின்னர் பிராட்வே மற்றும் நீளம் ஆகிய இரண்டு தியேட்டர்களை மட்டுமே திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் போதிய ஆதரவு வராததால் அதை அப்படியே மூடி வைத்தனர். அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு ஒரு தியேட்டர் திறக்கப்பட்டது. ஒரே வாரத்தில் அங்க தீவிரவாதிகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் அப்போது அது மூடப்பட்டது.

தற்போது ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் அதை கருத்தில் கொண்டு அங்கு மீண்டும் திரையரங்குகளை திறக்க உள்ளனர். ஐனாக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து மூன்று திரைகளுடன் கூடிய பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் அங்கு திறக்கப்பட உள்ளது. மொத்தம் 500 பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய வகையில் அந்த திரையரங்குகள் கட்டப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 1ஆம் தேதி இந்த திரையரங்குகளில் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இது தொடங்கிய முதல் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தையும் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் இந்தியில் உருவாகி வந்த விக்ரம்வேதா ஆகிய படங்களை திரையிட உள்ளனர். அதற்கான டிக்கெட் முன்பதிவு வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது 32 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதால் அந்த மக்கள் குஷியில் உள்ளனர்.

Spread the love

Related Posts

தளபதி ஸ்டாலினை நேரில் சந்தித்த அடுத்த கணமே வெளிவந்த தளபதி விஜயின் அறிக்கை | “தளபதி” பட்டத்துக்கு ஆபத்தா ?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது திரைக்கு

பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை ? | அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி படுத்த உள்ளதாக தகவல்

கடந்த இரண்டு வருடங்களாக கொரனாவின் தாக்கத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. மாணவர்களை நலனுக்காகவும் ஆசிரியர்களின்

என் புருஷன் எதையுமே கண்டுக்கமாட்டான்… நித்தி சிஷ்யை நடிகை ரஞ்சிதா ஆதங்கம்

நித்தியானந்தாவுடன் கிசுகிசுக்கப்படாமல் நடிகை ரஞ்சிதா இருந்ததே இல்லை குறிப்பாக கைலாச அதிபர் நித்யானந்தாவின் பெயர் எப்போதெல்லாம்