பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை உலகம் எங்கும் பல திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்திற்கு எப்போதிலிருந்தோ ஏகப்பட்ட ஒரு எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கு இல்லாத அளவிற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதனால் இந்த படம் வசூல் ரீதியில் ஒரு மிகப்பெரிய சாதனை படைக்கும் என பலரும் எண்ணி வருகின்றனர். ஆனால் அதோடு முடிந்து போகப் போவதில்லை இந்த படம் இரண்டாவது பாகமும் வரப்போகிறது. அந்த படத்திற்கும் இப்போதிலிருந்து மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது இந்த படத்தில் கார்த்தி விக்ரம் ஐஸ்வர்யா ராய் ஜெயம் ரவி திரிஷா போன்றோர்கள் நடித்திருக்கின்றனர். ஆனால் இதற்கு முன்பு விஜயும் மகேஷ் பாபு இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்ற ஒரு தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் மணிரத்னம் அவர்கள் தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபு பொன்னியின் செல்வன் படத்தில் தேர்வு செய்யப்பட்டதை பற்றி கூறிய போது விஜயும் மகேஷ் பாபுவும் தற்போது பொன்னியின் செல்வன் கதையில் இல்லாதது நல்லது தான். பொன்னியின் செல்வன் கதையே அதற்கான கதாபாத்திரங்களை நேரத்தையும் தேர்வு செய்து கொண்டு விட்டது. ஒருவேளை நான் அவர்களை வைத்து இயக்கியிருந்தால் அதை ஒரே ஒரு பாகம் கொண்ட படமாக மட்டும் தான் எடுத்திருக்க முடியும்.
